விளாம்பழத்தால் உண்டாகும் நன்மைகள்

விளாம்பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. ஆனால் இது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கல்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

* தயிருடன் விளாங்காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

* விளாம் மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும், நன்கு பசிக்கும்.

You may also like ...

வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, ந

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட

Also Viewed !

புதிய தொகுப்புகள்