அரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு

உணவுப் பொருட்களுக்கு காரத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அரிய மருத்துவ குணங்களையும் கொண்டது மிளகு.

• மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோட்டின்கள் மற்றும் பிற சத்துக்கள் நமக்கு பாதுகாப்புக் கவசங்களாகத் திகழ்கின்றன.

• சருமப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய்,மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.

• நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

• மிளகு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நாக்கின் ருசி ஆதாரங்களைத்தூண்டிவிட்டு வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம் தான் செரிமானத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஜீரணம், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.

• நாம் எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் கருமிளகு அதன் ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு, கொழுப்புச் செல்களைச் சிதைக்கிறது.

இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர்சீராக வெளியேற உதவிபுரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.

• சரியாக செரிமானமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிளகாய்ப்பொடிக்கு பதிலாக மிளகுப்பொடியைப் பயன்படுத்துவது நல்லது.

• கருப்பு மிளகை நன்றாகப் பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவரலாகத் தடவவும். அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ போட்டு குளிக்கவும். இப்டிச் செய்வது, தலைப் பொடுகைப் போக்கும்.

• கருமிளகு, மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

You may also like ...

சூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல் கண்டுபிடிப்பு!

சூரியனும், கோள்களும் காணப்படும் பகுதியில் புதிய அர

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந

புதிய தொகுப்புகள்