பொதுவாக பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும்.
ஏனெனில் பாதாம் பாலில் சாதாண பாலை விட கால்சியம் மற்றும் புரோட்டீன் குறைவாக இருந்தாலும், ஒரு கப் பாதாம் பாலில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உள்ளன.
இருப்பினும் பாதாம் பால் பக்கவிளைவுகளை கூட ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அந்தவகையில் தற்போது பாதாம் பாலை குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
* நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் முகத்தில் வீக்கம் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
* பாதாம் பால் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
* பாதாம் பால் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக நாளடைவில் அவர்களின் செயல்பாடுகளில் இது சிக்கல்களை ஏற்படுத்தும்.
* லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் பாலை உட்கொண்ட பிறகு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, அதை முழுமையாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
* பாதாம் பாலை உட்கொள்வது அரிப்பு, சரும அழற்சி மற்றும் படை நோய் போன்ற தோல் எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த எதிர்வினைகள் பெரும்பாலும் பாதாம் பாலை உட்கொண்ட 10 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் தோன்றும்.
* பாதாம் பாலின் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகள், மூச்சுத்திணறல் மற்றும் சிக்கலான சுவாசம் என்பவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பது அவர்கள் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.