ஒருவருக்கு உடல் எடை கூடினால், திடீரென்று தோல் கடினத்தன்மை அடையும், உடல் சோர்வு, அடிக்கடி மாதவிடாய் கோளாறு, அதிக ரத்தப்போக்கு இவையெல்லாம் இருந்தால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சினை இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
தைராய்டு சுரப்பி
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்ப்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி.
வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதுதான்.
உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்பவை இந்த ஹார்மோன்கள்தான்.
இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அளவு அதிகரிப்பது, குறைப்பது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஏற்படும்.
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும்
கர்ப்பிணிகளுக்கு தைராய்டு குறைபாடு இருந்தால் அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் செல்ல வேண்டும்.
அப்படி செல்லாதபோது குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
பெண்கள் கர்ப்பமான உடன் தைராய்டு டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம். ஏனெனில் கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் செல்ல வேண்டும்.
தைராய்டு குறைபாடு இருந்தால் குழந்தைக்கு புத்திக்கூர்மை பாதிக்கப்படும். கற்றல் குறைபாடு ஏற்படும்.
பெண் குழந்தையாக இருந்தால் பருவமடைதலில் தாமதம் ஏற்படும், பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் குழந்தை பின்தங்கிவிடும்.
முக்கியமாக, கற்றலிலும் நினைவாற்றலிலும் குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்படும். குழந்தைகள் பருவமடைந்தால் மாதவிலக்கு அதிக நாட்கள் நீடிக்கும்.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.