பொதுவாக நம்மில் சில பெண்களுக்க மாதவிடாய் மாதம்மாதம் தள்ளிப் போவது வழக்கம். இது மருத்துவ ரீதியாக ‘oligomenorrhea‘ என அழைக்கப்படுகிறது.
குறிப்பாக இது எடை இழப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும்.
இந்த பொதுவான சிக்கல், தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை விளைவிக்கும்.
இதிலிருந்து விடுபட சில இயற்கை முறையில் உணவுகளை உட்கொண்டாலே போதும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
• ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி ஓம விதைகளையும் 1 தேக்கரண்டி வெல்லமும் சேர்த்து வேகவைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.
• ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளியை பச்சையாகவோ அல்லது சாறு பிழிந்தோ உட்கொள்ளலாம். ஒரு கப் பப்பாளி சாறு (தோராயமாக 200 மிலி) அல்லது ஒரு கிண்ணம் நிறைய பழுத்த பப்பாளி பழத் துண்டுகளை மாத சுழற்சி காலத்தின் நடுவில் சாப்பிடலாம்.
• இஞ்சியை தேநீருடனோ, தேனுடன் கலந்த இஞ்சி சாறு வடிவிலோ அல்லது வெறும் இஞ்சியை தேனுடன் கலந்தோ உட்கொள்ளலாம். வழக்கமான மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கப் இஞ்சி சாறை தண்ணீருடன் 2: 1 என்ற விகிதத்தில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
• ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃபிரஷ்ஷாகத் தயாரிக்கப்பட்ட செலரி ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இடுப்புப் பகுதி மற்றும் கருப்பையில் இரத்த ஓட்டத்தை நன்கு தூண்டும் வேலையைச் செய்யும். இது உங்கள் மாதவிடாயை முறையாகத் தூண்டும்.
• 2 கப் தண்ணீருடன் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளைப் போட்டு ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் விதைகளை வடிகட்டி எடுத்துவிட்டு, தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் உங்கள் மாத சுழற்சிக்கு ஒரு வாரம் முன்னதாக இருந்தே தொடர்ந்து தினமும் குடியுங்கள்.
• உங்கள் தினசரி தேவையாக 6 கிராம் உலர்ந்த பார்ஸ்லி இலை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டும், இது தலா 2 கிராம் என 3 தடவைகளில் 150 மில்லி தண்ணீரில் வேக வைத்து சாப்பிடுங்கள் அல்லது இது கலந்த தேநீர் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
• ஒரு கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை கலந்து ஒரு இரவு முழுதும் விட்டு விடுங்கள். காலையில் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கவும். இந்த முறையிலும் பயன்படுத்தலாம்.
• வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்துவிடுங்கள். காலையில் தண்ணீருடன் வேகவைத்து அதை காலையிர் குடித்து வாருங்கள். அதேபோல் மதிய வேளைகளில் மோரில் வெந்தயத்தை ஊறவைத்து குடித்து வாருங்கள்.
• மாதவிடாய்க்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாக ஒரு நாளைக்கு மூன்று முறை தூய மாதுளை சாற்றைக் குடிக்கத் தொடங்குங்கள். கரும்புச் சாறுடன் மாதுளை சாற்றை சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கவும்.
• கற்றாழையை இரண்டாக வெட்டி அதன் ஜெல்லை பிழிந்து எடுக்கவும்.. ஜெல்லுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து காலை உணவுக்கு முன் உட்கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு இந்த செயல்முறையை மேற்கொண்டால் நல்ல முடிவுகளைப் பெறலாம்.
• நீங்கள் ஒரு நாளைக்கு சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள்ளுடன் இரண்டு முறை சாப்பிடலாம். அல்லது தேநீருடன் ஒரு தேக்கரண்டி வறுத்த அல்லது பச்சை எள் ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம். அதுவும் குறைந்த அளவே எடுத்துக் கொள்ளுங்கள்.
• வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், கிவி மற்றும் தக்காளி, ப்ரோக்கோலி, பெல் பெப்பர்ஸ் போன்ற காய்கறிகள் உங்கள் அன்றாட உணவில் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.