அதிக தூரம் ஓடுபவர்களுக்கும், உடற் பயிற்சியே செய்யாதவர்களுக்கும் குறைந்த வாழ்நாளே..

அதிக தூரம் ஓடுபவர்களும், உடற் பயிற்சியே செய்யாதவர்களும் குறைந்த வாழ்நாளை வாழ வேண்டுமென்று சமீபத்திய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவாக ஓடுவது தேகத்திற்கு நல்லதல்ல. அதே சமயத்தில், மிதமாக ஓடுதலும், விரைவாக நடக்கும் பயிற்சியும் உடல் நலனுக்கு நன்மை பயக்கும் தேகப்பயிற்சிகள் ஆகும்.

அமெரிக்க தேகப் பயிற்சி வல்லுனர்களின் கருத்துப்படி, மிதமான தேகப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் வெகுநாள் வாழ்வதுடன், நீண்ட ஆயுட்காலங்களை ஆரோக்கியமாகக் கழிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

நியூயோர்க்கிலுள்ள இருதய ஆராய்ச்சி கழகம், 3800 ஓடும் நபர்களை சோதனை முறையில் ஆராய்ச்சி செய்து இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது.

44 வயதுள்ள ஆண்களும், பெண்களும் இந்த ஆராய்ச்சியில் தானாகவே வந்து பங்கேற்றுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் அவர்களது இரத்த அழுத்தம், மற்றும் அவர்களது உயர் இரத்த கொழுப்பு போன்றவற்றை சோதித்தறிந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக, அவர்கள் கண்டுபிடித்த உண்மை என்னவென்றால், மிக வேகமாக ஓடுபவர்களும், மிகுந்த தூரம் ஓடுபவர்களும், தனது உடலில் பாகங்களில் அதிக தேய்மானங்கள், எலும்புகளிலும், தசைகளிலும் ஏற்படுவதால் குறைந்த காலம் மட்டுமே வாழ முடியும்.

ஆனால், அதே சமயத்தில், மிதமாக ஓடுபவர்களும், நடைப் பயிற்சி செய்பவர்களும் மிதமான தேகப் பயிற்சி செய்பவர்களும் நெடு நாட்களுக்கு ஆரோக்கியத்துடன், கூடிய நீண்ட ஆயுட்காலத்தைப் பெறுவர் என்பதை இந்த 3800 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு விளக்குகின்றது.

You may also like ...

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்!

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை

அதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய

புதிய தொகுப்புகள்