முருங்கையின் இயற்கையான நன்மைகள்

இன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று போன்றவைகள் மூலம் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. இயற்கையான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால், ரசாயன உரங்களை கொண்டு உணவு பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது.

இந்த ரசாயன உரங்கள் நமது உடலுக்குள் தஞ்சமடைந்து, நாளடைவில் பல நோய்களை உருவாக்கி விடுகிறது.

இதனால் சிறு குழந்தைகள் முதல் பாதிக்கப்படுகின்றனர், பாதுகாப்பற்ற தண்ணீர், மாசு படிந்த காற்று ஆகியவற்றாலும் நோய் வேகமாக பரவுகிறது.

இவற்றை தடுக்க மனிதர்கள் அனைவரும் முயன்றால் மட்டுமே முடியும் என்றாலும் நோயின் தாக்கத்தை தாங்கி கொள்ளும் வகையில் கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் முருங்கை கீரையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, இதன் கீரை, காய் மற்றும் பூ அனைத்துமே பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடக்கூடியவை.

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்- 75.9%

புரதம்- 6.7%

கொழுப்பு- 1.7%

தாதுக்கள்- 2.3%

கார்போஹைட்ரேட்டுகள்- 12.5%

தாதுக்கள், வைட்டமின்கள்,

கால்சியம்- 440 மி.கி

பாஸ்பரஸ்- 70 மி.கி

அயன்- 7 மி.கி

வைட்டமின் சி- 220 மி.கி

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

இருமல்- தொண்டைக் கம்மல்

இருமல், தொண்டைக் கம்மல் ஏற்பட்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இவற்றை போக்க முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாக குழைத்து தொண்டைக் குழியின் மேல் தடவினால் இருமல், தொண்டைக்கம்மல் நீங்கும்.

 

வாயு தொல்லை நீங்க

உடம்பில் வாயுத்தொல்லை அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும்.

முருங்கை பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு தொல்லை அகலும்.

வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் அகன்று விடும். மனிதர்களுக்கு மிக எளிதாகும் நோய்களில் தலைவலி முதலிடத்தில் உள்ளது.

வெயில், டென்சன் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாத்திரைகள் சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கவலையும் உள்ளது.

இந்த தலைவலி தீர, முருங்கைப்பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை வலி விரைவில் குணமாகும்.

வயிற்று வலி தீர

முருங்கை காம்பு, கருவேப்பிலை காம்பு ஆகிய இரண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிக்கட்டி குடிநீரில் விட்டு குடித்து வரவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி விடும், வயிற்று வலியும் விடைபெற்றுவிடும்.

குழந்தைகளுக்கு டானிக்

வளரும் குழந்தைகளுக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனை கொடுக்கும்.

முருங்கை கீரையை சுத்தமாக கழுவி சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும்- வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

அவ்வாறு கொடுத்து வந்தால் இதிலுள்ள இரும்பு, சுண்ணாம்பு சத்து குழந்தையை திடமாக வளர உதவும்.

சிறுநீரக கோளாறு

ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறை எடுத்து அதில் கேரட் (அல்லது) வெள்ளரி சாற்றை ஒரு டம்ளர் சேர்த்து கலந்து குடித்து வரவும்.

இவ்வாறு தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கி விடும்.

ஜன்னி ஏற்பட்டால்

முருங்கை பட்டையை எடுத்து அதன் எடை அளவுக்கு கடுகு எடுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை ஜன்னி கண்டவரின் இரு உள்ளங்காலிலும் கனமான பற்று போட்டு துணியினால் கட்டி விட வேண்டும்.

சிறிது நேரத்தில் ஜன்னி நின்று விடும். பின்னர் கட்டை அவிழ்த்து விடவும்.

முகப்பரு - கரும்புள்ளிகள் மறைய

முகத்ததில் முகப்பரு கரும்புள்ளிகள் வந்துவிட்டால் முகத்தின் அழகை கெடுத்து விடும்.

ஆனால் இதற்காக கவலைப்பட வேண்டாம். கீழ்க்காணும் முறையைக் கையாளுங்கள், புத்துணர்வோடு இருக்கலாம்.

முருங்கை கீரையின் சாற்றை எடுத்து அதனுடன் சம அளவு எலுமிச்சம் பழத்தின் சாற்றை விட்டு நன்கு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு- கரும்புள்ளிகள் அகன்று முகம் பொலிவு பெறும்.

You may also like ...

இந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்

பல் வலிக்கு இயற்கையான தீர்வு!

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி

புதிய தொகுப்புகள்