இரவு சரியா தூங்க முடியவில்லையா? சில எளிய இயற்கை வழிகள் இதோ..!

இன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும் அவதிப்படுவதுண்டு. இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பதால், பகல் வேளையில் சரியாக செயல்படாமல் போய், நாள் முழுவதுமே சோர்வுடன் இருக்க நேரிடுகிறது.

இதனால் அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய முடியாமல் போகிறது.

அந்தவகையில் தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எளிய முறைகளில் ஒன்றை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

• தினமும் காலையில் சிறிது நேரத்தை ஒதுக்கி, தவறாமல் தியானம் செய்து வாருங்கள். இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

• லாவெண்டர் எண்ணெயை சுவாசிக்கவும் அல்லது தலையணையில் இந்த எண்ணெய் துளிகளை தெளித்து விடவும். வேண்டுமானால் லாவெண்டர் டீ தயாரித்துக் கூட குடிக்கலாம். இல்லாவிட்டால், லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, நெற்றிப் பகுதியில் மசாஜ் செய்யலாம்.

• மசாஜ் செய்வதற்கு எண்ணெய் அல்லது க்ரீம்மை தேர்வு செய்யலாம். அதிலும் நறுமணமிக்க எண்ணெய்களைப் பயன்படுத்தினால், மன அழுத்தம் நீங்குவதோடு, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

• மக்னீசியம் சத்து நிறைந்த உணவுகளாவன பசலைக்கீரை, வாழைப்பழம், கொண்டைக்கடலை, ப்ராக்கோலி, கிட்னி பீன்ஸ், நட்ஸ் மற்றும் கடல் உணவுகள் உட்கொள்ளுங்கள்.

• ஒருவர் தினமும் போதுமான உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

• ஒரு கப் சூடான பால் குடியுங்கள். அதுவும் அத்துடன் 1/4 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடியுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

• ஒரு கப் வெதுவெதுப்பான பாலுடன் 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து, தூங்கும் முன் குடியுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், நற்பதமான ஜாதிக்காயைத் துருவி வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து குடியுங்கள்.

• 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, உறங்கச் செல்லும் முன் குடியுங்கள்.

(Date: 06.10.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

குறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ!

வெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப

புதிய தொகுப்புகள்