கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

பெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

இருப்பினும் மாசு நிறைந்த சூழல்களில் செல்வதனாலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் முடி உதிர்வு ஏற்படுகின்றது.

குறிப்பாக உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியமானது ஆகும்.

கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும் எனப்படுகின்றது.

அந்தவகையில் எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
 
• முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளதால் அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் இதில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பயோட்டின் என்கிற விட்டமினும் உள்ளது.

• பீன்ஸில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.

• ஓட்ஸில் விட்டமின் பி-யும், தாது உப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக்கூடியது. ஓட்ஸில் உள்ள சத்துக்கள் முடி வேகமாகவும், கருமையான நிறத்திலும் வளரத் தேவையானவை ஆகும்.

• கேரட்டில் விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.

• பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

(Date: 11.09.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

முதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா? சூப்பர் டிப்ஸ் இதோ...

பொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால

புதிய தொகுப்புகள்