நம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ இயற்கை உணவுகள் தான் காரணம்.
அவர்கள் உபயோகித்து வந்த இயற்கை மருத்துவ முறைகள், அந்த மருந்துகள் நோய்களில் இருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்தது.
அந்தவகையில் 2 டீஸ்பூன் பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான மருத்துவ பயன்களை தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
• பப்பாளி விதை மற்றும் தேனில் உள்ள சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெயியேற்றி உடலை முழுமையாக சுத்தம் செய்கிறது.
• வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு இது ஒரு சிறந்த இயற்கை முறையாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் நமது செரிமான செயலை பாதிக்கிறது. பப்பாளி மற்றும் தேனில் உள்ள அமிலங்கள் புழுக்களை கொன்று செரிமானத்தை சீர் செய்கிறது.
• பப்பாளி விதை, தேன் கலந்த கலவையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.
• தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. எனவே, அதனை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் நமது உடலின் சதைகளை ஒழுங்கு செய்து அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.
• தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சோர்வுடன் போராடி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது.
• தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்ட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
• பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் சில வகை எம்சைம்கள் உள்ளன. அவை ஆண்களின் விந்து எணணிக்கையை அதிகரித்து ஆண்மைக் குறைவு பிரச்சனை ஏற்டாமல் தடுக்கிறது.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.