பெரும்பாலானவர்கள் தலைவலியால் அவதிப்படுவதுண்டு, மன அழுத்தம், அதிக வேலை, கோபம் உட்பட பல காரணங்கள் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
ஒரு சிலருக்கு அதிகம் பசித்தாலும் தலைவலி வரும், நாற்றம் போன்றவற்றால் கூட தலைவலி ஏற்படுவதுண்டு.
அந்நேரத்தில் எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
• தலைவலி என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது ஸ்ட்ராங்கான காபி தான், ஆனால் சில நேரங்களில் இது தலைவலியை அதிகரிக்கவே செய்கிறது, இதுதவிர சீஸ் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களும் தலைவலியை அதிகரிக்கும்.
• மது அருந்தும் நபர்களுக்கு 29 முதல் 36 சதவிகிதம் வரையிலானவர்களுக்கு ஒற்றை தலைவலி பாதிப்பு உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
• நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கவே செய்யும்.
• செயற்கை இனிப்புகளும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகின்றன, மேலும் வைட்டமின் சி அதிகம் கொண்ட சிட்ரஸ் பழங்களும் தலைவலியை உண்டாக்கும்.
• 2 முதல் 22 சதவிகிதம் வரையிலானவர்களுக்கு டார்க் சொக்லேட்டால் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது.
• கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகம் உட்கொண்டாலும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகிறது.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.