வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் நமது சமுதாயத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. வாய் பகுதி ஆரோக்கியத்தின் மூலம் ஆரோக்கியமான வாழ்கை பெருவதற்கான வாய்ப்பு உள்ளது. கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகள் உங்களுக்கு மேன்மையான வாய்பகுதி ஆரோக்கியம் பெற வழி வகுக்கும்.

பல்லின் அமைப்பு

ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள்ளது – கிரீடம் மற்றும் வேர். கிரீடம் தான் நீங்கள் பார்க்ககூடிய பல்லின் பாகம், வேர் என்பது ஈறுகளின் அடியில் ஒளிந்திருக்கும். பல்லின் மொத்த நீளத்தில் 2/3 பாகம் வேர் தான்.

ஒவ்வொரு பல்லும் நான்கு வேவ்வேறு விதமான திசுக்களால் உருவாக்கப்பட்டது.