நகத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்

நோய்த் தொற்று

இது பொதுவாக நகத்திற்கு அண்மையில் காணப்படும் தோலில் ஏற்படும் நோய்த் தொற்று ஆகும். இது குழந்தைகளில் அதிக அளவில் ஏற்படுகின்ற நோய்த் தொற்று ஆகும். குழந்தைகள் நகங்களைக் கடிப்பதனால் மற்றும் விரல்களை அடிக்கடி உறிஞ்சும் பழக்கத்தினால் இது அதிக அளவில் ஏற்படுகிறது. இந்த நகங்களின் நோய்த் தொற்றல் ஆனது சடுதியானது, நீண்ட காலத்துக்கு உரியது என இரு வகைப்படும்.

காரணங்கள்:

சடுதியான மற்றும் நீண்டகாலத்திற்குரிய நகத் தொற்றுக்கள் தோலின் மேற்பரப்புப் படையில் ஆரம்பிக்கும். சடுதியான நோய்த் தொற்றானது பொதுவான தொங்கும் நகம், உள்நோக்கி வளர்ந்த நகம், நகம் கடித்தல் ஆகியன காரணமாக தோலானது காயப்படுவதால் ஆரம்பிக்கிறது. இந்த நோய்த் தொற்றுக்கு காரணமான மிகப் பொதுவான கிருமி ஸ்டபைலோகொக்கஸ் ஓரியஸ் ஆகும். ஏனைய கிருமிகள் ஆவன ஸ்ரெப்ரோகொக்கஸ், ஸியூலோமொனாஸ் ஆகியன ஆகும்.

நீண்ட காலத்துக்கு உரிய நகத் தொற்றானது மீண்டும் மீண்டும் தோலை அரிப்புக்கு உள்ளாக்குகின்ற நீர் மற்றும் இரசாயனப் பதார்த்தங்கள் காரணமாக ஆரம்பிக்கின்றது. கண்டிடா எனப்படும் ஒருவகை பங்கசுவினால் இந் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

சடுதியாக ஏற்படும் நகத் தொற்றானது சிவந்து சூடான வலியுள்ள வீக்கமாக ஆரம்பிக்கிறது. இது சில வேளைகளில் மோசமடைந்து சீழ்த் தன்மையை உருவாக்குவதன் மூலம் நகமும் தோலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறாக்கப்படும். முழங்கை மற்றும் கையின் கீழான குழியில் உள்ள நிணநீர்க் கணுக்கள் வீக்கம் அடையலாம்.

நீண்டகாலமாக காணப்படும் நகத் தொற்றானது சிவத்துக் காணப்படும். எனினும் சடுதியான நோய்த் தொற்றைப் போன்று அல்லாது வலியானது காணப்படாது. இந்த தொற்றினை சுற்றி உள்ள தோலானது வீங்கிக் காணப்படலாம். ஸ்டோமோனாஸ் கிருமியால் நோய்த் தொற்று ஏற்படுமாயின் பச்சை நிறமான சீழ் ஆனதுநகத்தின் கீழாகக் காணப்படும்.

நகத்தின் கிருமித் தொற்றானது நோயாளியில் காணப்படும் அறிகுறிகள் மூலம் நோய் நிர்னயம் செய்யப்படும். சில வேளைகளில் சீழ் காணப்படுமாயின் அது கல வளர்ப்பு மூலம் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் தொற்றை உருவாக்கிய நோய்க் கிருமி கண்டறியப்படலாம்.

நீண்ட காலத்திற்குரிய நோய்த் தொற்றானது கண்டறிதல் சற்று சிரமம் ஆகும். இது நகத்தின் மாதிரிக்கு பொற்றாசியம் ஐதரொட்சைட்டை சேர்த்து நுணுக்குக் காட்டியில் அவதானிப்பதன் மூலம் பங்கசுக்கள் தென்படுவதன் மூலம் நோய் நிர்ணயம் செய்யப்படும்.

சிகிச்சை:

நாள் ஒன்றுக்கு 3/ 4 முறை சுடுநீரால் நனைத்தல் சடுதியான நகத் தொற்றைக் குறைக்கும். அத்துடன் சேகரிக்கப் பட்டுள்ள சீழின் அலவையும் குறைக்கும். பெரும்பலான சமயங்களில் இதற்கு கிருமிகொல்லி மருந்துகள் தேவைப்படும். கெபலெக்ஸின், க்லொக்ஸாசிலின் போன்றவை இதற்குப் பயன்படும். சீழ்க்கட்டி உருவாகினால் அது சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்படும். சில வேளை நகத்தின் ஒரு பாகம் வெட்டி எறியப்படலாம்.

நீண்டகால நகத் தொற்றானது பங்கசுக்கு எதிரான கிருமிகொல்லியான கீடோகொனசோல் மருந்து மற்றும் ஐதரோகோடிசோன் ஆகியவற்றால் குணப்படுத்தப்படும். எயிட்ஸ், சலரோகம் போன்ற காரணிகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படல் வேண்டும்.

You may also like ...

நடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய நவீன உலகில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

நியூஸிலாந்தில் தட்டம்மை நோய்த் தாக்கத்தினால் அதிகமானோர் பாதிப்பு!

நியூஸிலாந்தில் 1000க்கும் அதிகமானோர் தட்டம்மை நோயி