தொழுநோய்

தொழுநோய் நுண்கிருமிகளால் ஏற்படக்கூடிய ஒரு நோய். தொற்றின் தன்மை குறைந்த தொற்றும் தன்மை உடையது. இந்நோய் கொண்ட நபர், மருந்து ஏதும் எடுத்துக்கொள்ளாத நிலையில், அந்நபருடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு இந்நோய் பரவலாம்.

அறிகுறிகள்:

> உணர்ச்சியற்ற வட்ட வடிவில் காணப்படும் தேமல்
> கை கால்களில் மரத்தல்
> பல சிவப்புநிற புள்ளிகள் அல்லது முகம், புட்டம், உடலின் மற்ற பின்பகுதிகளில் காணப்படும் உணர்வற்ற அல்லது உணர்வுடனோ உள்ள வட்ட வட்டமான திட்டுகள்

சிகிச்சை:

தொழுநோய் என்பது முற்றிலும் குணமாக்கக்கூடிய ஒன்று. தொழுநோய் இருப்பது மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டால் கீழ்க்காண்பவைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. நோயின் குணமாகும் தன்மை பற்றியோ அல்லது மற்றவர்களுக்கு தொற்றிவிடுமோ என்பதனைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

2. மல்டி ட்ரக் தெரபி (எம்.டி.டி) பல்மருந்து சிகிச்சை.

> மல்டி ட்ரக் தெரபி எனும் சிகிச்சையினை தவறாமல் ஒழுங்காக எடுத்துக்கொண்டால் தொழுநோயினை எந்த நிலையிலும் குணப்படுத்த முடியும். எம்.டி.டி என்பது மாத்திரை மற்றும் காப்சுயூள் (உறையிட்ட மருந்து) ஆகிய இரண்டும் இணைந்த தொகுப்பாக வருகிறது.
> மல்டி ட்ரக் தெரபி எல்லா மாவட்டங்களிலேயும் உள்ள தொழுநோய் மையங்கள், பெரும்பாலான மருத்துவமனைகள், சிறுவர் சுகாதார மையங்கள் மற்றும் பொது சுகாதார மையங்கள் போன்றவைகளில் இலவசமாகவே கிடைக்கிறது
> இந்த மல்டி ட்ரக் தெரபி-யினை மருத்துவர் கூறும் நாள் வரை அவசியம் பின்பற்ற வேண்டும்.
> நோயாளி எம்.டி.டி மருந்தினை எடுத்துக் கொள்ள மறந்து போகாமல் இருக்க, வீட்டில், ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். (உ.ம். உணவுக்குப்பின்)

தொழுநோய் கீழ் உள்ள முறைகளில் பரவாது:

> தொழுநோய், மரபுவழி தோன்றும் நோய். தவறான நடத்தையினால் வருகிறது. அசுத்த இரத்தத்தினால் வருகிறது. தவறான உணவுப் பழக்கத்தினால் ஏற்படுகிறது. கடந்த கால பாவத்தினால் ஏற்படுகிறது என இன்றும் சில மக்கள் நம்புகின்றனர். இவை தவறான ஒன்று.

> மக்கள் இந்நோய் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பரவுகிறது என்றும், தொழுநோய் கண்டவர்களை தொடுவதினால் பரவுகிறது என்றும் நினைக்கின்றனர்.

> தொழுநோய் பெரும்பாலும் உருமாற்ற குறைபாடுகளுடன் தொடர்புடையது என்றும், உடலின் உறுமாற்ற குறைபாடு ஏற்பட்டவுடன் தான், இந்நோயினைக் கண்டறிய முடியும் என்றும் நினைக்கின்றனர்.

> தொழுநோய் அதிகம் தொற்றக்கூடிய ஒன்று என்றும், தொற்றும் தன்மை உருமாற்றக் குறைபாடுடன் தொடர்புடையது என்றும் நினைக்கின்றனர்.

> தொழுநோயை குணப்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர்.

> தொழுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று நினைக்கின்றனர்.

 

கேள்வி பதில்

1. ஒரு நோய் என்றால் என்ன? தொற்று நோய்கள் என்றால் என்ன?

> நோய் என்பது உடலை பாதிக்கும் ஒரு அசெளகரிய நிலையாகும்.
> தொற்று நோய்கள் என்பவை உணவு, தண்ணீர், காற்று மற்றும் தொடுதல் மூலமாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன.

2. தொற்று நோய்கள் பரவுவதற்கான பல்வேறு வழிகள் என்ன?

தொற்று நோய்கள் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது மறைமுகத் தொடர்பு மூலமாகவோ பரவலாம்.

3. நேரடி தொடர்பு மற்றும் மறைமுகத்தொடர்புக்கான வேறுபாடுகள் என்ன?

> நேரடி தொடர்பு என்பது தொற்று இல்லாத நபருக்கு தொற்றுள்ள நபருடன் நேரடித்தொடர்பு ஏற்படும் போது நடப்பதாகும்.
> மறைமுகத்தொடர்பு என்பது தொற்று கிருமி பாதிப்புள்ள பொருட்களான பேனாக்கள், பென்சில்கள், கண்ணாடிகள் போன்றவற்றை தொடுவதன் மூலம் ஏற்படுவதாகும்.