அடைப்பான் (ஆந்த்ராக்ஸ்)

அடைப்பான் (ஆந்த்ராக்ஸ்) என்னும் நோய், பேஸில்லஸ் ஆந்த்ராஸிஸ் என்ற பாக்டீரியாவால் உண்டாகிறது.

பாதிக்கப்படும் பகுதிகள்:

அதிகளவு பாதிக்கப்படும் உடல் பகுதி - தோல்
குறைவாகப் பாதிக்கப்படும் உடல் பகுதி - சுவாச மண்டலம், ஜீரண மண்டலம்.

விளைவுகள்:

நோய் பரவும் முறை

அ. தோல்

> ஸ்போர் எனப்படும் விதை தோலில் படியும்போது
> நோய்வாய்பட்ட உயிரினத்தை தொடுவதால் அல்லது நோய்வாய்பட்ட மிருகத்தின் மாமிசத்தைத் தொடுவதினால் ஏற்படுகிறது.

ஆ. சுவாச மண்டலம்

> காற்று மண்டலத்துடன் கலந்த விதை உட்சுவாசிக்கும் போது

இ. ஜீரண மண்டலம்

> சரியாக சமைக்காத அல்லது பச்சை மாமிசத்தை உட்கொள்வதால் அல்லது நோய்வாய்பட்ட மிருகத்தின் மாமிசத்தை உபயோகப்படுத்துவதால்

ஈ. சுவாச மண்டலம் மற்றும் ஜீரண மண்டலம் மூலமாக ஆந்த்ராக்ஸ் ஒருவரிடத்திலிந்து மற்றவருக்கு பரவாது

அறிகுறிகள்:

அ. தோல்

குறிப்பிட்ட பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, பின் தோல்பகுதியில் புண்ணாகி, கொப்புளங்களாக மாறும். புண் ஏற்பட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் கருப்பு நிற வடுக்கள் ஏற்படும்.

ஆ. சுவாச மண்டலம்

லேசான காய்ச்சல், சோர்வு, அதிகளவு வியர்வை தோன்றுதல், மார்பு பகுதியில் அசெளகரியம் போன்றவை. சுவாச மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் அறிகுறிகள் அரிதாக தோன்றும்

இ. ஜீரண மண்டலம்

குமட்டல், பசியின்மை நோய், வாந்தி மற்றும் காய்ச்சல். பின்னர், மோசமான வயிற்று வலி, இரத்த வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கிட்டத்தட்ட எல்லா வேளையிலும் இரத்தமாக பேதி ஏற்படும்.

நோய் பராமரிப்பு முறை:

> நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகவும்
> சமைக்காத மாமிசம் மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் உணவை உட்கொள்வதை தவிர்க்கவும்
> ஆடு, மாடு போன்ற விலங்குகளை கையாளும் போது தற்காப்புடன் செயல்பட வேண்டும்.