தட்டம்மை (மீசல்ஸ்)

மறுபெயர்- ரூபெலா
தோற்றுவிக்கும் காரணி - வைரஸ்

அறிகுறிகள்:

> தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்தொற்று.
> ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும்.
> நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.
> உடல் முழுவதும் மற்றும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.

பரவும் முறை:

> விரைவாகப் பரவக்கூடிய இவ்வகை தட்டம்மை வைரஸ், இருமல், தும்மல், நோய்வாய்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது, நோய்வாய்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் இந்நோய் பரவுகிறது.

> இவ்வகை வைரஸ் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

> இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கு நான்குதினங்களுக்கு முன்பாகவும் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அவர் வழியாக நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.

தடுப்பு வழிமுறைகள்:

> மருத்துவரின் பரிந்துரைப்படி தடுப்பூசி போடவேண்டும்.
> தட்டம்மை சத்துக் குறைவு உள்ள இளம் குழந்தைகளில் மரணத்தை ஏற்படுத்தலாம்.எனவே உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.