சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்)

இந்நோய், வரிசெல்லா சோஸ்கடர் வைரஸ் எனும் நோய்கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இது வெகுவாக தொற்றக்கூடியது. இவ்வைரஸ் கொண்ட துளிகளை சுவாசிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது.

அறிகுறிகள்:

ஏற்படும் கொப்புளங்களின் தன்மைகள்

1.சிவப்பாக தோன்றும், தோலின் மேல் எழும்பி தோன்றும்
2.கொப்புளங்களில் சீழ் நிறையும், பின் வெடிக்கும் மற்றும் வெடித்த கொப்புளங்களில் புண்கள் தோன்றும்.
3.முகம், தலை மற்றும் உடல் பகுதியில் மிக அதிகம் காணப்படும். கைகள், கால்களில் குறைந்து காணப்படும்.
4.அரிப்பு அதிகமாக இருக்கும்.

தடுத்துக் காத்தல்:

இப்பொழுது சின்னம்மைக்கு எதிராக தடுப்பூசிகள் உண்டு. இதனை 12 மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய, இந்நோய் வந்திராத, மற்றும் உடலில் சின்ன அம்மையை எதிர்க்கும் சக்தி குறைந்துள்ள ஒருவருக்கு கொடுக்கலாம்.

கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

> சின்னம்மை கொண்ட பிள்ளைகள், ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொண்டால் ரெயிஸ் சின்ட்ரோம் எனப்படும் நோய் ஏற்படும். இது ஒரு கடுமையான நோய். இதனால், மூளையில் பாதிப்பு மற்றும் மரணம் விளையும். எனவே எப்பொழுதும் மருத்துவரை அணுகி பாதுகாப்பான மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பது நல்லது.

> பெரியவர்களில் நிமோனியா நோய் ஏற்பட அதிகளவு சாத்தியம் உள்ளது. கூடுதலாக, எச்.ஐ.வி நோய்தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை உள்ள நோயாளிகளுக்கு நிமோனியா ஏற்படும் ஆபத்து அதிகம்.

> சின்னம்மை இதுவரை கண்டிராத கர்ப்பிணிப் பெண்கள், சின்னம்மை கண்ட நபர்களை தொடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.