போலியோ (இளம்பிள்ளை வாதம்)

போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.

காரணங்கள்:

வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது. மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றில் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.

இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இவ்வாறு வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கிறது.

அறிகுறிகள்:

1. மிதமான நோய்தொற்று

பெரும்பாலான நிகழ்வுகளில், நோயாளிகள் எந்த அறிகுறிகளும் இன்றி காணப்படுவர். காணப்படும் அறிகுறிகளாவன,

> ப்ஃளு போன்ற அடையாளங்கள்
> வயிற்று வலி
> வயிற்றுப் போக்கு/பேதி
> வாந்தி
> தொண்டை வறட்சி
> மிதமான காய்ச்சல்
> தலைவலி

2. மூளை மற்றும் தண்டு வடத்தில் நடுத்தரமான நோய்தொற்று

> மிதமான நோய்தொற்றில் ஏற்படும் அனைத்து அடையாளங்கள்.
> நடுத்தரமான காய்ச்சல்
> கழுத்து விரைத்துப் போதல்
> முழங்காலின் பின்பகுதியில் உள்ள தசைகளில் மிருதுவாகும் மற்றும் வலி தோன்றும்.
> முதுகு வலி
> வயிற்று வலி
> தசைகள் விரைத்துப் போதல்
> பேதி
> தோலில் கொப்புளங்கள்.
> அதிகப்படியான பலவீனம் அல்லது சோர்வு

3. மூளை மற்றும் தண்டுவடத்தில் மோசமான நோய் தொற்று

> கை, கால்களில் உள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் தசைகள் செயலிழப்பு வேகமாக ஏற்படுதல்.
> தசையில் வலி, தசை மென்மையாதல் மற்றும் தசை பிடிப்பு (கழுத்து, முதுகு, கைகள் அல்லது கால்களில்)
> கழுத்தை அசைத்தல், கை அல்லது காலை தூக்குவது போன்ற செயல்களை செய்ய முடியாமல் போதல்
> வயிறு வீக்கமடைதல்
> முகபாவனை செய்வது கஷ்டமாதல்
> மலம் மற்றும் மூத்திரம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுதல் (மலச்சிக்கல்)
> உணவு மற்றும் தண்ணீரை விழுங்குவது கஷ்டமாதல்
> சுவாசிப்பதில் சிரமமாக இருப்பது.
> வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருத்தல்

ஏற்படக்கூடிய சிக்கல்கள்:

இதய தசைகளில் நோய்தொற்று ஏற்படலாம். கோமா எனும் சுயநினைவு இழத்தல் மற்றும் மரணம்.

இடர் காரணிகள் / ஆபத்தான காரணிகள்

> சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவறைகளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது.
> போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள்.
> இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழல் உள்ள பகுதிகள்.
> இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்)
> எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது.

போலியோவை தடுத்துக் காக்க:

> உங்களையும் மற்றும் வசிக்கும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
> பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் (தடுப்பூசி அட்டவணையின் படி)வேண்டும்.
> ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ளுதல்.