டிப்த்திரியா (தொண்டை அடைப்பான்)

இது சுவாச மண்டலம் (நுரையீரல்கள்), தொண்டை, வாய் அல்லது தோலை பாதிக்கும் ஒரு நோய் தொற்று ஆகும்.

காரணங்கள்:

இந்நோய் “கார்னிபாக்டீரியம் டிப்த்திரியா” எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது மூக்கு மற்றும் வாயில் சுரக்கும் கோழையின் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு பரவுகிறது. கூடுதலாக, இவ்வகை பாக்டீரியாக்கள் ஒருவித நச்சுப் பொருளினை உற்பத்தி செய்கிறது. இந்நச்சுப் பொருள் இதய தசைகளையும் மற்றும் நரம்புகளையும் சிதைவடையச் செய்கிறது.

அறிகுறிகள்:

> மூக்கில் நீர் வடிதல்
> தொண்டை வலி
> காய்ச்சல்
> சுகவீனமாக உணர்தல்

தடுத்துக் காத்தல்:

குழந்தைகளுக்கு டிடிபி தடுப்பூசியை போட வேண்டும். விவரம் அறிய அக்குழந்தையின் தடுப்பூசி அட்டவணையினை பார்க்க வேண்டும்.

டிப்த்திரியா வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான ஒரு நோய். எனவே, எந்தவொரு குழந்தைக்காவது இந்நோய் இருக்கலாம் என சந்தேகிக்கும் போது, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.