டைபாய்ட் காய்ச்சல்

டைஃபாய்ட் காய்ச்சல் என்பது சால்மோநெல்லா டைஃபி என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு உடலை பலவீனப்படுத்தும். டைஃபாயிட் காய்ச்சல் வருவதை தடுக்கலாம் மற்றும் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளைக்(ஆண்டிபயாட்க்ஸ்) கொண்டு சிகிச்சை கொடுக்கலாம்.

டைஃபாய்ட் காய்ச்சல் எப்படி பரவுகிறது?

சல்மோனெல்லா டைஃபி வகை பாக்டீரியாக்கள் மனிதர்களில் மாத்திரம் உயிர்வாழக்கூடியவை. டைஃபாய்ட் காய்ச்சல் கண்ட நபர்களில், இவ்வகை பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டம் மற்றும் குடற்பாகங்களில் காணப்படும். இந்நோயினை பரப்புவோர் (கேரியர்ஸ்) என்றழைக்கப்படுவோர்களில், டைஃபாய்ட் காய்ச்சல் குணமடைந்து இருந்தாலும், தொடர்ந்து பாக்டீரியாக்கள் உடலில் இருக்கும். டைஃபாய்ட் நோய்வாய்பட்ட மற்றும் அந்நோயின் சீரியர்ஸ் ஆகிய இவ்விருவகை நபர்களும், தங்கள் மலத்தின் மூலம் சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாவை வெளியிடுகின்றன.

சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்களை வெளியேற்றும் நபர்கள் கையாண்ட உணவு அல்லது பானங்களை ஒருவர் உட்கொள்ளும் போதோ அல்லது சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்களால் மாசு அடைந்த கழிவுநீர் ஒருவர் குடிப்பதற்கும் உணவுப் பொருட்களை கழுவப் பயன்படும் தண்ணீருடன் கலக்கும் போதும் டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்படக்கூடும். எனவே, உலகில் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் கைகளை கழுவும் பழக்கமில்லையோ அல்லது தண்ணீர் கழிவுநீரினால் மாசுபடக்கூடிய நிலை உள்ளதோ அங்கெல்லாம் டைஃபாய்ட் காய்ச்சல் பொதுவாக காணப்படும். ஒருமுறை சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்கள் உணவு மூலமாகவோ அல்லது தண்ணீர் மூலமாகவோ உடலுக்குள் சென்றால், அவை எண்ணிக்கையில் பெருகி இரத்த ஓட்டத்தில் பரவுகிறது. பின் உடலில் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் தோன்றுகின்றன.

டைஃபாய்ட் காய்ச்சலின் அறிகுறிகள்:

டைஃபாய்ட் காய்ச்சல் கண்ட நபர்களில் தொடர்ந்து மிக அதிகப்படியாக 103 - 104 டிகிரி எப் (39 - 40 டிகிரி சி) என்ற அளவில் காய்ச்சல் இருக்கும். உடல் பலவீனமடையும், வயிற்று வலி, தலைவலி மற்றும் பசியின்மை போன்றவை இருக்கும். சில நோயாளிகளில், ரோஜாவண்ண தட்டையான புள்ளி போன்ற புண்கள் காணப்படும். டைஃபாய்ட் காய்ச்சல் இருக்கிறதா என்பதை நிச்சயித்து அறிய ஒரே வழி, மலம் அல்லது இரத்தத்தில் (சால்மோனெல்லா டைஃபி) பாக்டீரியா உள்ளனவா என்பதை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிவதேயாகும்.

டைஃபாய்ட் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?

இரண்டு அடிப்படை செயல்கள் டைஃபாய்ட் காய்ச்சல் வராமல் உங்களைப் பாதுகாக்கும்

1. பாதுகாக்கப்படாத உணவு மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும்.
2. டைஃபாய்ட் காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசியினை போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் சில வழிமுறைகளாவன;

> ஒரு நிமிடத்திற்கு நன்கு கொதித்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

> ஐஸ் இல்லாமல் குடிக்கும் பானங்களை பருக வேண்டும்.

> நன்கு சமைக்கப்பட்ட சூடான நீராவியுடன் உள்ள உணவுகளை உட்கொள்ளல் வேண்டும்.

> பச்சைக் காய்கனிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது நன்கு கழுவி பயன்படுத்தவும்.

> முதலில் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னர் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோலை உங்கள் கைகளால் உரித்து, பின் சாப்பிடவும். தோலில் ஒட்டியுள்ளவைகளை உண்ண கூடாது.

> திறந்த நிலையில் உள்ள உணவு,திண்பண்டங்களை சுத்தமாக வைக்கப்படாத இடங்களில்/கடைகளில் உள்ள உணவு மற்றும் பானங்களை சாப்பிடக்கூடாது.

> தடுப்பூசிகள் தேவை என்பதனை மனதில் கொள்ளவும். டைஃபாய்ட் தடுப்பூசி எடுத்து பல ஆண்டுகள் ஆகும் போது, அதன் செயல்பாட்டு திறன் குறைகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கெனவே டைஃபாய்ட் தடுப்பூசி எடுத்திருந்தாலும் மருத்துவரை அணுகி கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) போட வேண்டிய காலத்தை அறிந்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருட்கள் டைபாய்ட் காய்ச்சலை குணப்படுத்தாது(ஆண்டிபயாடிக்ஸ்).