மம்ப்ஸ் (பரோடைடிஸ்)

மம்ப்ஸ் (பரோடைடிஸ்) திடீரென ஏற்படும் வைரஸ் நோய். இதில் வலியுடன் கூடிய பரோடிட் சுரப்புகளின் வீக்கம் ஏற்படும். இந்த சுரப்பிகள் காதுகளுக்கு முன் மற்றும் கீழ்புறம் அமைந்துள்ளது. இவை உமிழ்நீரை அல்லது எச்சிலை உற்பத்தி செய்யும்.

இது ஏற்பட காரணம் என்ன?

மம்ப்ஸ் ஒரு ஒட்டிப்பரவக்கூடிய வைரஸ் நோய். இந்நோயானது மூலம் நோய்கண்ட ஒருவரின் எச்சிலை மற்றொருவர் தொடும்போது ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. 2 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கபடுகின்றனர். வயதானவர்களில் பரோடிட் சுரப்பிகள் தவிர விதைப்பைகள் (டெஸ்டிக்கல்ஸ்), கணையம் மற்றும் நரம்பு மண்டலம் என பிற உறுப்புகளையும் பாதிக்கிறது. வைரஸ் தாக்கிய 12 லிருந்து 24 நாட்களுக்குள், நோய் அறிகுறிகள் ஏற்படும்.

நோய் அறிகுறிகள்:

ஆரம்பத்தில் ஒருபக்க பரோடிட் சுரப்பி வீக்கமடைந்து வலி நிறைந்ததாக இருக்கும் 3 லிருந்து 4 நாட்களுக்குப்பின் இரண்டுபக்க பரோடிட் சுரப்பிகளும் வீக்கமடைந்துவிடும். உணவை அசைபோட்டு சுவைக்கும்போது மற்றும் உணவை விழுங்கும்போதும் வலியானது அதிகரிக்கும், புளிப்பான உணவு வகைகள் மற்றும் பழச்சாறுகள் உமிழ் நீர் சுரப்பதை அதிகரிக்கும்போது வலி மிக அதிகமாக இருக்கும். அதிகளவு உடல் வெப்பம் கொண்ட காய்ச்சல், தலைவலி மற்றும் பசி குறைவு காணப்படும். காய்ச்சலானது 3 லிருந்து 4 நாட்களில் குறைந்துவிடும் மற்றும் சுரப்பிகளின் வீக்கம் 7 லிருந்து 10 நாட்களில் குறைந்துவிடும். குழந்தை சுரப்பிகளில் வீக்கம் இருக்கும் வரை (7 லிருந்து 10 நாட்களில்) இந்நோய் பிறருக்கு பரவும். இந்த நாட்களில் அக்குழந்தையினை பிற குழந்தைகளிடமிருந்து தூரமாக பிரித்து வைக்கவேண்டும் மற்றும் பள்ளி செல்வதற்கும் அனுமதிக்கக்கூடாது.

வயதான ஆண்களில் விரைப்பைகளில் வீக்கம் மற்றும் வலி (ஆர்க்கைடிஸ்) இருக்கலாம். மேலும் மம்ப்ஸ் மூலையில் வீக்கம் / கட்டியினை (என்ஸெபலைடிஸ்) ஏற்படுத்தலாம். கீழ் காணும் ஏதேனும் இருப்பின் மருத்துவரை உடணடியாக அணுகி ஆலோசிக்கவும்.

இந்த அறிகுறிகளுக்கு உடன் மருத்துவரை அணுகுவோம்!

> தீவர தலைவலி
> கழுத்துப்பகுதி விரைத்துக்கொள்ளுதல்
> மந்தநிலை / தூங்கிவழிகிறநிலை
> வலிப்பு
> அதிகளவு வாந்தி
> அதிகளவு உடல் வெப்பநிலை
> விதைப்பைகளில் வீக்கம்

சிகிச்சை என்ன?

மம்ஸ்ஸிற்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை கிடையாது. பல்வேறு அறிகுறிகள், மருந்துகள் மூலம் சரிசெய்யப்படும். பாரசிடமால் போன்ற மருந்தின் மூலம் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது. இம்மருந்து வலியினையும் நீக்குகிறது. குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்கக்கூடாது. அதிக திரவத்துடன் கூடிய மென்மையான, கலவை உணவு சுலபமாக அளிக்கவும்.புளிப்பான உணவுகள் மற்றும் பழச்சாறுகள் தவிர்க்கப்படவேண்டும். பாதிக்கபட்டவர்கள் எல்ல நேரங்களிலும் படுக்கையில் இருப்பது அவசியமில்லை.ஓய்வாக நடை பயிலுதல் என ஈடுபடலாம்.

இது வராமல் தடுப்பது எப்படி?

ஒருமுறை மம்ப்ஸ் ஏற்பட்டால் வாழ்நாட்கள் முழுவதும் மீண்டும் இந்நோய் ஏற்படாது. ஏனெனில் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மையினை அளிக்கிறது. மம்ப்ஸ் ஏற்படாத பிள்ளைகளுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன, அவை மப்ஸ்ஸிலிருந்து பாதுகாக்கிறது. எம் எம் ஆர் எனப்படும் தடுப்பு மருந்து மிசல்ஸ், மம்ப்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் மூன்று வகை வைரஸ் நோய்களை எதிர்த்து பாதுகாக்கிறது. இந்த தடுப்பு மருந்து அனைத்து குழந்தைகளுக்கும், பிறந்த 15 மாத வயதிற்குள் அவசியம் அளிக்கப்படவேண்டும். இம்மருந்தினை காய்ச்சல் உள்ள குழந்தை அல்லது கர்ப்பிணிப்பெண்களுக்கு அவசியம் கொடுக்கக்கூடாது.

ஏற்படும் சிக்கல்கள் யாவை?

மம்ப்ஸ் சில வேளைகளில் மூளையில் நோய்தொற்றி பாதிப்பை ஏற்படுத்தும். இது ஒரு மோசமான நோய் நிலையாகும். ஆண்களில் விதைப்பைகள் பாதிக்கப்படுமெனில், அது ஆண் மலட்டுத்தன்மையில் முடியும்.