டெடானஸ் (நரம்பிசிவு நோய்)

டெடானஸ் ஒரு தொற்றக்கூடிய நோய், இந்நோய் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாவினால் உடலில் உள்ள காயம் மாசடையும் போது ஏற்படுகிறது. டெடானஸ் ஏற்படுத்தும் பாக்டீரியம் க்ளோஸ்ட்ரிடியம் டெடானி – யானது ஒரு கடினமான உயிரினம், இது ஸ்போர் எனும் நிலையில் பல ஆண்டுகள் மண்ணில் உயிர் வாழக்கூடியது.

உடலில் உள்ள காயம் பாக்டீரியா ஸ்போரினால் மாசு அடையும் போது டெடானஸ் ஏற்படுகிறது. இந்த ஸ்போர்கள் ஊக்கிவிக்கப்பட்டு கிராம்- பாசிடிவ் பாக்டீரியாவாக மாறி எண்ணிக்கையில் பெறுக்கம் அடையும் போது நோய்த்தொற்று ஆரம்பமாகிறது மற்றும் இவை சக்திவாய்ந்த நஞ்சுப்பொருளினை உற்பத்தி செய்கிறது இந்த நஞ்சு தசைகளை பாதிக்கிறது. டெடானஸ் ஸ்போர்கள் எல்லா சிதோஷன நிலையிலும் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் காணப்படுகிறது. கிழிந்த காயமுள்ள உடற்பகுதி வழியாக, இந்த பாக்டீரியம் நமது உடலில் நுழையும். அதாவது சிதைவடைந்த நகங்கள், சிறாய்ப்பு வெடிப்புகள் அல்லது பூச்சிக்கடிகள், தீக்காயங்கள், தோலில் ஏற்படும் அனைத்து கிழிச்சல் காயங்கள் வழிகளில் நுழையும்.

இந்நோய் 4 வகையாக காணப்படும். அவையாவன;

1. பொதுவான டெடானஸ், இது உடலிலுள்ள அனைத்து எலும்புத்தசைகளையும் பாதிக்கும். இது அதிக பொதுவான மற்றும் மிக மோசமான வகையாகும்.
2. வட்டார டெடானஸ் இது பாக்டீரியாவால் நோய்த்தொற்று கண்ட காயத்தில் அல்லது அதைச்சுற்றியுள்ள தசைகளில் தோன்றும்.
3. ஸ்பேலிக் டெடானஸ். இது தலையில் காயம் அல்லது காதுகளில் நோய் தொற்று ஏற்பட்ட ஓரிரு நாட்களில் முதலில் முகத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு தசைகளை விரைவாக பாதிக்கும்.
4. நியோநேடல் (புனிற்றுப்பருவ) டெடானஸ் இது பொதுவான டெடானஸ் போன்றது. ஆனால் ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடைய குழைந்தைகளை மாத்திரம் பாதிக்கும். இந்த நிலை வளர்ந்த நாடுகளில் அரிதாக காணப்படும்.

டெடானஸ்‍‍க்கான காரணங்கள்:

> க்ளோஸ்ட்ரிடியம் டெடானி எனும் வகையான பாக்டீரியா இந்நோய் தோன்ற காரணமாகும். இந்த பாக்டீரியா இரண்டு உருவில் காணப்படும்: ஒன்று ஸ்போர் / சிதில் விதை (உறங்கு நிலை) மற்றொன்று வளர்வாக்கச்செயல்பாடுடைய செயல் நிலை (செய்வினை வடிவான) இவை எண்ணிக்கையில் பெருகும்.
> ஸ்போர்கள் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் இருக்கும். இங்கு இவை பல வருட காலங்கள் உயிருடன் இருக்கும். இந்த ஸ்போர்கள் அதிகமான மற்றும் குறைந்த என எல்லா தட்ப வெப்பநிலைகளிலும் உயிர் வாழக்கூடியவை.
> பொதுவாக, காயங்கள் டெடானஸ் ஸ்போர்களினால் மாசடையும். இருந்தபோதும் டெடானஸ் ஸ்போர்கள் முளைத்து வளர்வாக்கச் செயல்பாடுடைய பாக்டீரியாவாக மாறும் போது டெடானஸ் – ஐ தோற்றுவிக்கும்.
> செயல்வினை வடிவான பாக்டீரியா, டெடானோலைஸின் மற்றும் டெடானோஸ்பாஸ்மின் எனும் இரண்டு வகை புறநஞ்சுவினை வெளிவிடுகிறது. டெடானோலைஸினின் வேலை என்னவென்பது தெளிவாக அறியப்படவில்லை, ஆனால் டெடானோஸ்பாஸ்மினே நோய் தோன்ற காரணமாகும்.
> தோலில் திடீரென தோன்றும் காயங்களை தொடர்ந்தே இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில், குத்துக்காயங்கள், கிழிப்புக்காயங்கள் அல்லது கீரல் காயங்களால் ஏற்படுகிறது.

டெடானஸ் ஏற்பட காரணமான பிற காயங்களாவன;

> அறுவைச்சிகிச்சை
> நசுங்குக்காயங்கள்
> சீழ்கள் / சீழ்க்காயங்கள்
> குழந்தைப்பிறப்பு
> போதை மருந்து பயன்படுத்துபவர்கள், ஊசி போடுமிடம்
> இறந்த திசுக்களுடன் உள்ள காயங்கள் (உதாரணத்திற்கு – தீக்காயங்கள், நசுங்குக்காயங்கள்) அல்லது வேற்று பொருட்கள் (பாரின் பாடி) போன்றவைகளால் டெடானஸ் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
> டெடானஸ் – ற்கு எதிரான நோய்த்தடுப்பாற்றலூட்டும் ஊசி போட்டுக்கொள்ளாதவர்கள் மற்றும் நோய்த்தடுப்பாற்றலைப் பேன கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களில் டெடானஸ் நோய் ஏற்படலாம்.

டெடானஸ் நோய் அறிகுறிகள்:

பொதுவாக டெடானஸ்ஸின் ஆரம்ப முறையீடு, கீழ் காண்பவைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

> உறுத்துணர்வு, தசைப்பிடிப்பு, தசை நோவு / நோய், பலஹீனம் அல்லது உணவு விழுங்குவதில் கடினம் போன்றவை பொதுவானவை.
> முகத்திலுள்ள தசைகள் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படும். வாய்க்கட்டு (ட்ரைஸ்மஸ்) அல்லது தாடையிருக்கு / தாடை ஒட்டிக்கொள்ளுதல் மிகப்பொதுவானதாகும். வாய் அசைக்க காரணமான தாடை தசைகளில் இசிப்பு (ஸ்பாஸம்) ஏற்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது.
> தசை இசிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் போதும் மற்றும் இதன் விலைவாக தலை பின் பக்கம் வளைந்து மற்றும் உடல் முன்பக்கம் வளைந்து ஒபிஸ்தோடொனஸ் எனப்படும் உடல் பின் பக்கம் வளைந்துள்ள நிலை ஏற்படுகிறது. தசை இசிப்பு போதுமானளவு அதிகரித்து எலும்புகளை உடையவும் செய்யும். மற்றும் எலும்பு இணைப்புகள் இடம் மாறியமையவும் செய்யும்.
> மிக மோசமான நிலையில், குரல் நாண் (வேகல் கார்ட்) அல்லது சுவாச தசைகளிலும், தசை இசிப்பு ஏற்படும்.
> தலை டெடானஸ்ஸில் தாடை ஒட்டிக்கொள்வதுடன் கூடுதலாக முகத்திலுள்ள ஒன்று அல்லது இரண்டு பிற தசைகளிலும் இசிப்பு ஏற்படும். மூன்றில் இரண்டு பங்கு சமையங்களில் பொதுவான டெடானஸ்ஸாக உருவெடுக்கலாம்.
> வட்டார டெடானஸ்ஸில், தசை இசிப்பு, அடிப்பட்ட இடம் அல்லது அதை சுற்றி ஏற்படும். இந்த நிலை வளர்ந்து பொதுவான டெடானஸ்ஸாக வளரும்.
> நியோநேடல் (புனிற்றுப்பருவ) டெடானஸ் பொதுவான டெடானஸ்ஸை ஒத்தது. ஆனால் இது ஒரு மாதவயதிற்குட்பட்ட குழந்தைகளில் மாத்திரம் ஏற்படும். பிறந்த குழந்தைகள் உறுத்துணர்வுள்ளவர்களாகவும் மற்றும் பால் உறிஞ்சும் தன்மை குறைந்தும் அல்லது விழுங்குவது கடினமாகவும் இருக்கலாம்.

டெடானஸ் நோய்த்தடுப்பு:

> செயல்திறன்மிக்க தடுப்பாற்றல் முறையின் மூலம் / முறையினால் முழுமையாக தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றுதான் டெடானஸ். டெடானஸ் டாக்ஸாய்ட், அறிமுகப்படுத்திய 1920 – ஆண்டுகளில் இருந்தே, பாதுகாப்பானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. டெடானஸ் டாக்ஸாய்ட் என்பது வேதிப்பொருட்கள் அல்லது வெப்பத்தினை கொண்டு நஞ்சுத்தன்மையை குறைத்த ஒருவகை செயல்திறன் நீக்கப்பட்ட டெடானஸ் நஞ்சுவாகும், ஆனால் எதிர்பாற்றல் திறனை கொண்டுள்ளது.

> டெடானஸ் டாக்ஸாய்ட் தனியாகவோ அல்லது பெரும்பாலான நேரங்களில் மூன்று கூறுகளையுடைய தடுப்புசியில், ஒரு கூறாகவோ கிடைக்கிறது. இது குழந்தைகளுக்கு முதன்மை தடுப்பூசியாக டிப்தீரியா டாக்ஸாய்ட் மற்றும் பெர்டுஸிஸ் வாக்சினுடன் (டீபிடி) கலந்தும் மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு டிப்தீருயா டாக்ஸாய்டாகவும் கிடைக்கும்.

> முதன்மை தடுப்பாற்றலுக்காக, பெரியவர்களுக்கு, டெடானஸ் ஊசியினை இரண்டு முறை, 4 அல்லது 6 வார இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது ஊசி, இரண்டாம் ஊசிக்குப்பிறகு 6 முதல் 12 மாதங்கள் கழித்து கொடுக்கப்படவேண்டும். 10 வருடங்களுக்கு ஒருமுறை, நோய் எதிர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வண்ணம், கூடுதல் மருந்தானது கொடுக்கப்படவேண்டும்.

> டெடானஸ் தடுப்பாற்றலுட்டும் ஊசி குறிப்பாக 50 வயது நிரம்பியவர் மற்றும் அதைவிட வயதானவர்களுக்கு பறிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் டெடானஸ் இவ்வயதினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. டெடானஸ் தடுப்பூசி கீழ்க்காணுபவர்களுக்கு அவசியம் தரப்படவேண்டும்.
    1. ஆரம்ப தடுப்புஊசி போட்டுக்கொண்டோமா என்ற ஐயம் உள்ளவர்கள்.
    2. சூடான, குளிர்ந்த தட்பவெப்ப நிலையிலுள்ள நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள்.
    3. எறு / உரம் அல்லது தூசியுடன் கூடிய விவசாய நிலத்தில் வேலை செய்பவர்கள்.
    4. வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு / சீவல் காயத்திற்கு உள்ளாகும் வேலை உள்ள நபர்கள்.

> தடுப்பாற்றலுட்டும் ஊசி போடாத அல்லது போதுமான அளவு தடுப்பாற்றலுட்டும் ஊசி போடாத அல்லது சுகாதரமற்ற சூழலில் குழந்தை பெற்றுக்கொண்ட கர்பிணிப்பெணகள். தடுப்பூசி போட்ட பின்னர் நோய் எதிர் பொருட்கள் தாயிலிருந்து குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் செல்கிறது.