குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்புகள், வெடிப்புக்குதிகால்கள் என்றும் அறியப்படும், இது ஒரு எளிய சருமப்பிரச்சனையாகும் மற்றும் இது ஒரு தொல்லையாகும், ஆனால் இது மோசமான மருத்துவ பிரச்சனைகளுக்கும் ஈட்டுச்செல்லும். பாதம், பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்படுவதால் குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது, சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்படுவதால் அவை வலியுள்ளவையாகவும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணமாகவும் இருக்கும்.

க்ராக் எனப்படும் குதிகால் வெடிப்புகள் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். குதிகால் வெடிப்பு பொதுவாக வரண்ட சருமத்தில் (ஸீரோஸிஸ்) ஏற்படுகிறது. காலின் விலிம்புப்பகுதியில் தோல் மிக தடிமனாகும் (காலஸ்) போது இதன் அறிகுறிகள் மிகவும் மோசமாகிறது.

காரணங்கள்

குதிகால் வெடிப்புகள் எந்த ஒரு நபரையும் பாதிக்கும், ஆனால் ஆபத்துக்காரணிகளாவன:

> வரட்சியான சிதோஷன நிலையில் வாழ்வது
> பருமனான உடல்
> தொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பது அல்லது சாண்டல்களை அணிவது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது.
> செயலற்ற வியர்வை சுரப்பிகள்

பல கால் நோய் நிலைகளைப் போன்று, குதிகால் வெடிப்புகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது ஆபத்தானதாகலாம் மற்றும் வெடிப்புகள் ஆழமானதாகலாம் அல்லது வெடிப்புகளில் நோய்த்தொற்று ஏற்படலாம். மிகக்குறிப்பாக, சர்க்கரை நோய் அல்லது ஈடிணக்கம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ள மக்களில் இது ஆபத்தானதாகலாம்.

சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு

கால்களை ஒழுங்காக தவராமல் ஈரப்படுத்துவது குதிகால் வெடிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். ஒரு முறை இவை ஏற்பட்டால் , தினமும் நுறைக்கற்களை பயன்படித்தி தடித்து உறியும் வண்ணம் உள்ள தோலினை குறைக்கலாம். காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது, சாண்டல்களை அணிவது அல்லது தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிர்க்கவும். அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும்.

குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அனிவதும் உதவும்.

வீட்டு வைத்தியம்

வீட்டில் உள்ள போது உறங்கச்செல்லும் முன் ஈரப்பதமூட்டும் பசைபொருட்களை கால்களில் பூசுவது மற்றும் இரவு முழுவதும் ஈரப்பதம் காலில் உள்ள வண்ணம் இருக்க, இரவு நேரத்தில் விஷேஷித்த கால் உறைகளை அணிவது, ஈரப்பதம் மாறாமல் பாதுகாப்பது, போன்றவை குதிகால் வெடிப்பு சிகிச்சைக்கு ஒரு நல்ல திறவுகோலாகும். உங்களுக்கு இதில் முன்னேற்றம் காணப்படவில்லையென்றால், பாதவியல் (போடியாட்ரிக்ஸ்ட்) மருத்துவரை பார்க்கவும்.

You may also like ...

குதிகால் வலி பற்றிய தகவல்கள்

குதிகால் வலிதரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்க

பெர்டுசிஸ் / ஊஃபிங் காஃப் (கக்குவான் இருமல்)

இது ஒரு பாக்டீரியா நோய்தொற்று. இது முதலில் மூக்கு