Language :     Englishதமிழ்

தலைவலிக்கான காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்

தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

* நேரத்தை சரியாக திட்டமிடவும். உறங்கவும், விழிக்கவும் நேரத்தை நிர்ணயிக்கவும்.

* முறையான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்

* ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.

* தலைவலியைத் தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கவும்.

* வலி ஏற்படும் சந்தர்ப்பம் மற்றும் சாத்தியமான தூண்டு காரணிகளைக் குறித்து வைக்கவும்

* தூண்டு காரணிகளைக் கட்டுப்படுத்தினால், அதனால் மருந்தின் அளவு குறையும்.

* தரப்படும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளவும்.

* எரிச்சலூட்டும் உரத்த இரைச்சலைவிட்டு விலகி இருக்கவும்.

* முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்.

* வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

தலைவலியின் காரணங்கள்

வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வரலாம்.

டிரைஜெமினல் நியூரால்ஜியா:

40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வு போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம்.

கண் தொடர்பான நோய்கள்:

ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

பக்கவாதம்:

இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

தலைச்சுற்றல்:

இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். உளவியல் ரீதியான பிரச்சனைகள்

மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

சைனஸ் தலைவலி:

கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

பல் நோய்கள்:

பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும். மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

தைராய்டு குறைவு:

தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்விடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. குளிர் ஒத்தடம் எவ்வாறு வினை புரிகிறது ?

குளிர் ஒத்தடம் வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.

2: தலைவலிக்கு வலி நிவாரணி அளிக்கலாமா?

கூடாது. ஏனெனில் அவை அபாயகரமான தலைக் காயத்தின் அறிகுறிகளை மறைத்து விடக்கூடும்.

3. மூளையதிர்ச்சி என்றால் என்ன?

தலையில் அடிபடும்போது மண்டையோட்டிற்குள் இருக்கும் மூளை குலுங்கக் கூடும். இதுவே மூளையதிர்ச்சி எனப்படும். சிறிது நேரம் நுனைவிழக்க நேரலாம் (சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை). பெரும்பாலானோர் மு/ற்றிலுமாக மீண்டு விடுவர். ஆனால் ஒருசில சமயங்களில் இந்நிலை கவலைக்கிடமாக மாறும். யாருக்காவது மூளையதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை அழைக்க வேண்டும்.

4. மூளையதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை?

மூளை அதிர்ச்சியின் அறிகுறிகளாவன:

> மயக்கம்
> தலைலவலி
> மனக்குழப்பம்
> நோயுற்ற உணர்வு
> கண்மயக்கம்
> என்ன நடந்தது என்பதை மறந்துபோதல்

You may also like ...

இணைய இணைப்பு இல்லாதபோது Google Drive, Docs மற்றும் Sheets என்பவற்றினை பயன்படுத்த

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு வசதியான Googl

கோப் பிராயன்ட் மற்றும் அவரது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட்,