ஆஸ்துமா என்றால் என்ன ?
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களில், சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உதாரணம்: புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.