கணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கும் இன்சுலினை சரிவரப் பயன்படுத்த முடியாமல் போவதாலும், குறைவாக இன்சுலின் சுரப்பதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

ஆரோக்கியமான ஒரு நபர் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்.

உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் ஆக மாறுகிறது. நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்தில் கலந்து பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடல்செல்களுக்கு எடுத்துச்செல்கிறது. அதனால் உடல் இயக்கம் சீராக செயல்படுகிறது.