ஃபிரே நோய்

அறிமுகம்

உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளும், முகநரம்பும் (பொதுவாக அறுவை மருத்துவத்தால்) சேதமடைவதால் ஏற்படும் நரம்பியல் கோளாறே ஃபிரே நோயாகும்.

தோல் சிவப்பாதலும் காதுக்கு அருகில் இருக்கும் கன்னப் பகுதியில் வியர்வை உண்டாகுதலும் இந்நோயின் அறிகுறிகளாகும். உமிழ்நீரை அதிகமாக சுரக்க வைக்கும் சில வகை உணவுகளைப் பாதிக்கப்பட்டவர் உண்ணும், பார்க்கும், கனவுகாணும், நினைக்கும் அல்லது அவற்றைப் பற்றிப் பேசும்போது மேற்கண்ட அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும். ஒரு எலுமிச்சைத் துண்டை சாப்பிட வைத்து கன்னப்பகுதியில் வியர்வை தோன்றுவதைக் கொண்டு கண்டறியலாம்.

அறிகுறிகள்

சிவத்தல்.

• சுவையுணர்வு தூண்டப்படும்போது நடுக்காது நரம்பு செல்லும் பகுதியில் தோலின் மேல்பரப்பில் வியர்வை உண்டாகுதல்.
• சில சமயங்களில் அதே பகுதியில் எரிவது போல் வலி உண்டாகலாம். வலி இருமுறை தாக்குவதற்கு இடைப்பட்ட காலங்களில் உணர்ச்சியின்மை அல்லது உணர்வுக்குறைபாடு (மறதி அல்லது மிகையுணர்வு) சில வேளைகளில் ஏற்படலாம். இதனை சுவைப்புலன் நரம்புவலி என்றும் அழைப்பர்.

காரணங்கள்

உமிழ் நீர் சுரப்பியில் அல்லது அதன் அருகில் அறுவை மருத்துவம் செய்ததால் ஏற்படும் பக்க விளைவு அல்லது உமிழ்நீர்ச் சுரப்பியைக் கடந்து செல்லும் நடுக்காது நரம்புக் காயம் ஆகியவற்றால் பொதுவாக இந்நோய் உண்டாகிறது. சரியான முறையில் மறுபடியும் மீளமைப்பு ஏற்படாததால் துணைப்பரிவு மண்டல நரம்புகள் தடம் மாறுகின்றன. இதனால் சுவைப்புலனால் தூண்டப் பட்டும், உண்பதை நினைத்தாலும் இயல்புக்கு மாறாக வியர்வை உண்டாகிறது.

நோய் மேலாண்மை

பலனளிக்கும் மருத்துவம் எதுவும் இல்லை. கீழ்வருவன சாத்தியக் கூறுகள் ஆகும்:

• போட்டுலினம் டாக்சின் A  (Botulinum Toxin A)
• நரம்பு இழை குறுக்கு வெட்டு அறுவை (தற்காலிகமானது)
• ஸ்கோப்போலேமைன் போன்ற ஆண்டிகோலினெர்ஜிக் மருந்து அடங்கிய களிம்புகள்.

சிக்கல்கள்

தோலில் இருந்து மிகையாக வியர்வை சுரத்தல் ஃபிரே நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். அறிகுறிகளாவன:

• வியர்வை
• தோல் மெலிதல்
• வெடிப்பு

You may also like ...

யானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்

அறிமுகம்ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்

மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்

அறிமுகம்மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும்