பித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்தப்பையிலே வீக்கம் /அழற்சி ஏற்படும். இது பித்தப்பை அழற்சி எனப்படும். பின்வரும் காரணங்களினால் பித்தக் கற்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

• அதிகரித்த உடற்பருமன்.
• 40-50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள்.
• கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல்.
• கர்ப்பமாக இருத்தல்.
• குருதிக் கலங்கள் நீண்ட காலமாக உடைவடைதல் உதாரணம் தலைசீமியா (Thalasaemia)

பித்தப்பை அழற்சியின் நோய்க்குறிகள்

• வயிற்றுவலி
• தொடக்கத்தில் மேல்வயிற்றுப் பகுதியில் வலி காணப்படும். பின்னர் வலது பக்கமாக மேல்வயிற்றுப் பகுதியில் வலி காணப்படும்.
• ஆரம்பத்தில் வலி விட்டுவிட்டு ஏற்படும். பின்னர் அது தொடர்ச்சியாகக் காணப்படும்.
• வாந்தி வருவது போன்ற உணர்வு /வாந்தி ஏற்படலாம்.
• காய்ச்சல்.(38—39 ‘c)
• அஜீரணத்தன்மை
• உணவு உண்டபின் விசேடமாகக் கொழுப்பு உணவுகளை உண்டபின் சமிபாடடையாதது போன்ற உணர்வு அல்லது வயிறு வீக்கமுற்றது போன்ற அசௌகரியம் ஏற்படலாம்.
• வயிற்றின் வலது அமற்பகுதியில் வைத்தியர் அமத்திப்பார்க்கும் போது வலி ஏற்படலாம்.

பரிசோதனைகள்

வயிற்றில் X—கதிர் பரிசோதனை 10% பித்தக் கற்கள் X—ray பரிசோதனையில் அவதானிக்க முடியும்.

வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் ஸ்கான் பரிசோதனை (Abdominal Ultra sound scan) மிகவும் முக்கியமான பரிசோதனை , இதன்மூலம் பித்தப்பபை பற்றிய பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

You may also like ...

எலி ஜுரத்தைப் பற்றிய தகவல்கள்

லெப்டோஸ்பைரோஸிஸ்லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்

வட்டப்புழு நோய்த்தொற்று பற்றிய குறிப்புகள்

முன்னுரைஇது மனிதர்களில் நோயை ஏற்படுத்தும் ஒருவகை ந