Language :     Englishதமிழ்

யானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்

அறிமுகம்

ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்த வட்டமான, சுருண்ட, நூல்போன்ற பாரசைட் புழுக்களால் யானைக்கால் நோய் உண்டாகிறது. இவை தாமாகவோ அல்லது நுளம்புகளினால் உண்டான துளைகள் மூலமாகவோ உடலினுள் புகுந்து நிணநீர் மண்டலத்தை அடைகின்றன.

உச்சரேரியா பேன்கிராஃப்டி (Wuchereria bancrofti) அல்லது புருகியா மலாயி (Brugia malayi) என்ற நூற்புழுக்களே இந்நோயை உண்டாக்குகின்றன. முறையே கியூலெக்ஸ் கொன்கியுஃபேசியேட்டஸ் (Culex quinquefasciatus) மற்றும் மன்சோனியா அனலிஃபெரா/எம்.யூனிஃபர்மிஸ் (Mansonia  annulifera/M.uniformis) ஆகிய வகைக் நுளம்புகளால் பரப்பப்படுகின்றன.

கால் அல்லது விரை வீக்கமே இந்நோயின் அறிகுறி. இதனால் பலவகையான சமூகநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நிணநீர் யானைக்கால் நோயும் யானைக்கால் நோய் என்றே அழைக்கப்படுகிறது. உருவைச் சிதைத்து செயலிழக்கச் செய்யும் இந் நோய் பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் காணப்படும். ஆரம்ப கட்டத்தில் ஒன்றில் அறிகுறிகள் எதுவும் தென்படாது அல்லது தென்பட்டாலும் வெளிப்படையாக இருக்காது. நிணநீர் மண்டலம் சேதமடைகிறது.  இந்நிலை பல ஆண்டுகள் நீடிக்கும். தொற்றால் பாதிக்கப்பட்டவர் நோயோடேயே வாழ்கிறார். வலியோடு கூடிய வீங்கிய அவயவங்களே நீடித்த உடல் ரீதியான பாதிப்பு (அவயவவீக்கம்). குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வியாதியான விரைவீக்கம் அவ்விடங்களில் பரவலாகக் காணப்படும்.

நோய் அறிகுறிகள்

தோலும் அதற்கடியில் உள்ள திசுக்களும் தடிக்கும் நீர்க்கோர்வையே யானைக்கால் நோயின் காலங்காலமாகக் காணப்படும் அறிகுறியாகும்.

பொதுவாக உடலின் கைகால் பகுதிகளையே இது பாதிக்கும். எனினும் புயம், பிறப்புறுப்பு, மார்பகம், விரை ஆகியவையும் பாதிக்கக்கூடும். கைகால், மார்பு அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகும் நீர்க்கோர்வையால் அவை இயல்பான அளவைவிடப் பலமடங்கு பெரியதாகும். இதற்குக் காரணம் நிணநீர் மண்டலத்தின் நாளங்கள் தடைபடுவதே. இதன் நோயரும்பும் காலம் 10-14 நாட்கள்.

பிற அறிகுறிகள்:

> தோல் சொறி
> கூடுதல்/குறைந்த நிறப் புள்ளிகள்
> நதிக்குருடு (ஆன்கோசெர்க்கா வால்வுலசால் பரப்பப்படுவது)

காரணங்கள்

பெரும்பாலான யானைக்கால் நோய்கள் உச்சரேரியா பேன்கிராஃப்டி என்ற பாரசைட்டால் உண்டாகின்றன. கியூலெக்ஸ், ஏடிஸ், அனோஃபெலஸ் கொசுக்களால் பரப்பப்படுகின்றன. புருகியா மலாயி என்ற இன்னொரு பாரசைட்டை மன்சோனியா மற்றும் அனஃபெலஸ் நுளம்புக்கள் பரப்புகின்றன.

தொற்றுக்கிருமிகளைக் கொண்ட நுளம்பு ஆரோக்கியமான ஒருவரைக் கடிக்கும் போது மைக்ரோஃபிலாரே என்ற நுண்புழுக்கள் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைகின்றன. இங்கு அவை வளர்ச்சியுற்ற புழுக்களாகி பல ஆண்டுகள் வாழ்கின்றன.

வளர்ச்சியுற்ற பாரசைட்டுகள் மேலும் மைக்ரோஃபிலாரேக்களை உற்பத்தி செய்கின்றன. இவை இரத்த வெளிப்புற ஓட்டத்தில் செல்லும்போது குறிப்பாக இரவு நேரங்களில் கடிக்கும் நுளம்புகளால் உறிஞ்சப்படுகின்றன. இதே சுழற்சி இன்னொரு ஆரோக்கியமானவருக்குள் தொடங்குகிறது.

நோய் கண்டறிதல்

இரத்த மாதிரி:

நிணநீர் யானைக்கால் நோயை உண்டாக்கும் மைக்ரோஃபிலாலே இரவு நேரத்திலேயே இரத்த ஓட்டத்தில் சுற்றி வருகிறது. எனவே இரத்த மாதிரியும் இரவிலேயே எடுக்க வேண்டும். பின் அதற்கு ஹெமட்டாக்சிலினும் இயோசினும் கொண்டு சாயம் ஏற்ற வேண்டும். அதிக உணர்திறனுக்கு அடர்த்தி நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.

ஊனீர் சோதனை:

நுண்ணோக்கி சோதனைக்கு மாற்றாக ஊனீர் சோதனைகள் பயன்படுகின்றன. யானைக்கால் நோயாளிகளுக்கு இரத்தத்தில் எதிர்ஃபிலேரியல் IgG4 அதிக அளவில் இருக்கும். வழக்கமான மதிப்பீடுகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.

நோய் மேலாண்மை

பாதிக்கப்பட்ட இடத்தைச் சுத்தமாக வைப்பதால் அடுத்த கட்ட தோல் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

பாதிக்கப்பட்ட அவயவத்தை உயரமாகத் தூக்கி வைக்க வேண்டும். நிணநீர் ஓட்டத்தை மேம்படுத்தத் தொடர் உடற்பயிற்சிகள் செய்யவும்.

பொது மருந்து வழங்கல் திட்டப்படி இதற்கான மருந்து இரு மருந்துகள் சேர்த்து ஒரே தடவையாகத் தரப்படுகிறது: அல்பெண்டேசோலுடன் (400 மி.கி) நதிக்குருடு உள்ள இடங்களில் ஐவர்மெக்டினும் (150-200 மை.கி/கி.கி) மற்ற இடங்களில் டையீதைல்கார்பமைசினும் (6 மி.கி/கி.கி) அளிக்கப்படும். இவை இரத்த ஓட்டத்தில் இருந்து மைக்ரோஃபிலாரேக்களை அகற்றும்.

யானைக்கால் நோய்க்கு மருந்துகள் இருந்தாலும் கால் வீக்கம் பிறர் கவனத்தை ஈர்க்கும் அருவருப்பான  தோற்றத்தை அளிக்கும். எனவே ஃபிலேரியா கொசுக்கள் கடிப்பதைத் தவிர்ப்பதே சிறந்ததாகும்.

மேலும் அறிய மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

You may also like ...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி-மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி?

நோய் எதிர்ப்பு அதிகப்படுத்தும் சூப்பரான இஞ்சி- மஞ்

எலி ஜுரத்தைப் பற்றிய தகவல்கள்

லெப்டோஸ்பைரோஸிஸ்லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்