அஞ்சைனா என்றால் என்ன?

அஞ்சைனா என்னும் மருத்துவச் சொல் நெஞ்சின் நடுப்பகுதியில் ஏற்படும் ஒருவித அடைப்புப் போன்ற நோவு அல்லது அசௌகரியத்தை குறிப்பதாகும். இது பொதுவாக அப்பியாசத்துடன் தொடங்கி இளைப்பாறும் போது குறைந்து போகிறது. இவ்வலி 5-10 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். இதயத்திற்கு இரத்தம் குறைவாக செல்வதினாலேயே இந்த அறிகுறி காணப்படுகிறது.

நல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்

கொலஸ்டிரால்(கொழுப்பு) என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் உள்ளது. இது வைட்டமின் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே கூடுதலான கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருத்தல் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது மிகவும் சிரமமாகும்.ஏனெனில் பல வகையான உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளன.உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில செயல்பாடுகள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.