குழந்தைகளின் இரத்த சோகை பிரச்சினை

இரத்த சோகை என்றால் என்ன?

இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்குள் குறைவுபடுவது மற்றும் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து 100 மிலி இரத்தத்தில் 10 கிராமுக்கும் குறைவாய் இருப்பது இரத்த சோகை ஆகும்.

கீழ்காணும் அளவிற்கு கீழ் இரும்பு சத்து குறைவதால் இரத்தசோகை ஏற்படும்.
> வயது வந்த ஒரு சராசரி ஆண் - 13 கிராம் / 100 மிலி
> வயது வந்த ஒரு சராசரி பெண் - 12 கிராம் / 100 மிலி
> கற்ப்பிணிப் பெண் - 12 கிராம் / 100 மிலி
> குழந்தைகள் 6 மாதம் முதல் 6 வருடங்கள் வரை 11 கிராம்/ 100 மிலி
> குழந்தைகள் 6 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை 12 கிராம்/ 100 மிலி

இரத்த சோகை நோய்க்கான காரணங்கள்

• ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறை
• வைட்டமின் ஙி12 பற்றாக்குறை
• இரும்புச்சத்து பற்றாக்குறை
• இரத்த அணுக்களை அழிக்கும் ஒருசில நோய்கள் ஏற்படுவதால்
• அடிக்கடி வியாதிபடுவது (2ம் மலேரியா காய்ச்சல்)
• சில எலும்பு மஜ்ஜையை பாதிக்கக்கூடிய வகையான நோய்களால்
• காயம் மற்றும் நோய்களினால் ஏற்படும் இரத்தம் வீனாகுதல்
• சரியான உணவுப்பொருள் உட்கொள்ளாததினால் (உணவு பற்றாக்குறை)
• மகப்பேறு காலத்தில் சரியான உணவு உட்கொள்ளாததினால்
• மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதினால்

நோயின் அடையாள அறிகுறிகள்

• உடற்ச்சோர்வு
• மார்பு வலி
• சுவாசக் கோளாறு
• உடல் பருமன் போடுதல்
• தோல் வெளிர்தல்

You may also like ...

குழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்

கவனத்தை மாற்றுதல் உங்கள் குழந்தையை ஒரு நடவடிக்கைய

இரத்த அழுத்தத்திற்கான அறிவுரை!

இரத்த அழுத்தம் என்றால் என்ன?இரத்த நாளங்களில் உள்ள