உடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களை பாதித்து மீண்டும் மீண்டும் வீக்கத்தையும் நோவையும் விறைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும். மூட்டுக்களின் வீக்கம், நோவு, நிற மாற்றம் வேலை நிகழாமை என்பன இந்த நோயினால் எற்படும்.

மூட்டு வலி

காரணங்கள்:

மூட்டுவலி கீழ்காணும் காரணங்களால் ஏற்படலாம்.

  • ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்.
  • கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது).