நாம் வெளியில் எங்கையாவது செல்லும்போது திடீரென்று பக்கத்தில் ஒருவர் நினைவிழந்து, கீழே மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்கள் தண்ணீர் முகத்தில் தெளித்ததும் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார்.
மயக்கம் என்பது ஒருவருக்கு திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலைநிறுத்தம் செய்து விடும். இதனால் ஒருவர் தடாலடியாகக் கீழே சாய்ந்து விடுவார்கள்.
மயக்கம் இரு வகைப்படும் உடல் சார்ந்த மயக்கத்தில் `குறு மயக்கம்' ‘நெடு மயக்கம்’ என இரு வகை உண்டு.
மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறு மயக்கம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடும்.
மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைந்து போவதால் மயக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மயங்கித் தரையில் விழுந்தவருக்கு சிறிது நேரத்தில் ரத்த ஓட்டம் சரியானதும் மயக்கமும் சரியாகிவிடுகிறது இதை குருமயக்கம் என்று சொல்கிறார்கள்.
காலை உணவை சரியாக சாப்பிடாமலும், இரவுத் தூக்கம் தேவையான அளவு இல்லாததாலும், வெயிலில் ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பதும், உடல் சோர்வு இவையெல்லாம் மயக்கம் வருவதற்கான காரணங்கள் ஆகும்.
அளவுக்கு அதிகமாக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது போன்றவற்றாலும் குறு மயக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. ஒருவிதமான பயம், தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குறு மயக்கம் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மனக் கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்குக் குறு மயக்கம் ஏற்படலாம். இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளைக் கேட்டதும் மயக்கம் வரும். இன்னும் சில பேருக்கு ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும்.
இப்படி மயக்கம் அடைந்து விழுந்தவர்களுக்கு முதலில் நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்
• சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன் படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு வரும். அதிகமாக வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறி ஏற்பட்டால் உடனே தரையிலோ அல்லது படுக்கையிலோ படுத்துவிட வேண்டும். இப்படி செய்தால் மயக்கம் தருவதை தடுக்கலாம்.
• மயக்கம் அடைந்தவரை அப்புறப்படுத்தி, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
• மயக்கம் அடைந்தவரின் ஆடைகளின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிட வேண்டும்.
• மயக்கம் அடைந்தவரின் ஆணாக இருந்தால் இடுப்பு பெல்ட்டை லேசாக கழற்றி விட வேண்டும்.
• தலை கீழேயும் பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வைக்க வேண்டும்.
• சில நிமிடங்களுக்கு அவர்களின் பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது. அப்போது அவர்களின் இடுப்பில் உள்ள ரத்தம் மேல் நோக்கி நகர ஆரம்பிக்கும்.
• தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக் குழாய் அடைபடாமல் இருக்கும்.
• தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது. பதிலாக, பாதங்களுக்கு அடியில் வைக்க வேண்டும்.
• முகத்தில் ‘சுளீர்' என தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படும். மூளை நரம்புகள் வேகமாக வேலை செய்ய ஆரம்பக்கும். பின்னர் மயக்கம் தெளிந்துவிடும்.
• மயக்கம் தெளிந்த பின், குளுகோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம்.
• ஐந்து நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது நெடு மயக்கமாக இருக்கலாம். அப்போதுதான் மருத்துவர்களிடம் மயக்கம் அடைந்தவர்களை கொண்டு செல்ல வேண்டும்.
(Date: 02.05.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.