வயிற்றில் தொந்தி விழுகிறதே என்று கவலைப்படுகிறவர்கள், தினமும் ஐந்து மைல் தூரமாவது நடக்க வேண்டும். கொஞ்சம் விரைவாக நடக்க வேண்டும். தொந்தியைக் குறைப்பதற்கு விரைவாக நடப்பதை விடச்சிறந்த பயிற்சி வேறு எதுவும் இல்லை.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சைச் சாற்றைத் தடவி வரவேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். நகங்களை வெட்டும் முன் நகத்தில் எண்ணெய்யைத் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் நகத்தை வெட்ட முடியும்.
தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத்தூளில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும். பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து அதனுடன் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை படிப்படியாகக் குறையும்.