பொதுவாக நம்மில் பலரும் முகத்தின் மிருதுதன்மை இல்லாமல் போதல், சருமம் சொரசொரப்பு, சருமத்தில் நிறம் மாற்றம், பருக்கள், பருக்களால் வடுக்கள், கரும்புள்ளிகள், தேமல், கருவளையம், கண்களுக்கு கீழ் இரப்பை வீக்கம், முகத்தில் முடி இப்படி நாளுக்கு நாள் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வருவதுண்டு.
இதற்காக கண்ட கண்ட கிறீம்களை பூசி முகத்தை அசிங்கமாக்கி கொள்ளாமல் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எப்படி இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கலாம் என யோசித்தாலே போதும்.
அந்தவகையில் முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க இங்கு சில அழகுகுறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை கடைப்பிடித்தாலே போதும். முகத்தினை அழகுடனும் பொழிவுடனும் வைத்து கொள்ள முடியும்.
தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
• முகத்தில் இருக்கும் அழுக்குகள் சரும துவாரங்களை விட்டு நீக்க நீராவி பிடிக்கும் போது அதில் புதினா இலை சேர்த்து பிடிக்கலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகிறது. முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்படுவதால் முகம் புத்துணர்ச்சியோடு இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
• சந்தனம், மிளகு, ஜாதிக்காய் மூன்றையும் சேர்த்து அரைத்து முகப்பருக்களின் மீது தடவி வந்தால் முகப்பருக்கள் படிப்படியாக மறையும். பருக்கள் கட்டிகள் போன்று இருந்தால் அதனுடன் வேப்பிலையையும் சேர்த்து அரைத்து தடவலாம். இதனால் முகப்பருக்களுக்கு பின்பு அந்த இடத்தில் தழும்புகள் இருக்காது.
• வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து கருவளையம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் கருவளையம் நீங்கும்.
• வெள்ளரிக்காயை கண்களின் மீது வட்டவடிவமாக நறுக்கி வைத்தால் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
• இரவு தூங்கும் போதும் விளக்கெண்ணெய் வைத்து தடவி வந்தால் புருவத்தில் அடர்த்தி அதிகமாகும்.
• காலையில் எழுந்ததும் ஐஸ்கட்டியை கொண்டு வீக்கத்தின் மீதும் கண்களை சுற்றியும் வைத்தால் வீக்கம் வற்றிவிடும். தொடர்ந்து 15 நாட்கள் செய்துவந்தாலே போதும் இந்த வீக்கம் குறையும். அவ்வப்போது இதை செய்துவந்தால் கண்களில் எப்போதும் வீக்கம் தென்படாது.
• தினமும் இரவில் தூங்கபோகும் முன்பு கற்றாழை சாறு தடவி வர நாளடைவில் கருந்திட்டுகள் மறைய தொடங்கும்.
• கோதுமை தவிடு, சர்க்கரை, ஓட்ஸ் பொடி இவற்றில் ஒன்றை எடுத்துகொண்டு பாசிப்பயறு மாவு, அரிசி மாவு இவற்றுடன் கலந்து மூக்கின் மீது வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். ஸ்க்ரப் செய்யும் போது உடனடியாக அவை நீங்காது என்றாலும் தினமும் தேய்க்க தேய்க்க இவை வெளியேறும். பிறகு வாரம் ஒரு முறை நீங்கள் இப்படி செய்யலாம். முகத்துக்கு நீராவி பிடித்த பிறகு சருமத்துவாரங்கள் திறக்கும் அப்போது இதை வேரோடு நீக்குவது சுலபமாக இருக்கும்.
• முதிய தோற்ற பிரச்சனைக்கு வைட்டமின் இ ஆயில் சுருக்கத்தை நீக்கி முகத்தை பொலிவாக வைக்ககூடியது.
• பப்பாளி, வெள்ளரி, தக்காளி போன்ற பழங்களோடு வாழைப்பழத்தோலை கொண்டும் முகத்துக்கு மசாஜ் செய்தால் சுருக்கம் மறைந்து முகம் மினுமினுப்பையும் கூடுதலாக பெறலாம். மாதம் ஒரு முறை பாதாம் ஃபேஷியல் செய்வதும் சருமத்தை சுருக்கமில்லாமல் வைத்திருக்கும்.
• உதட்டின் நிறம் சிவப்பை அளிக்க பீட்ரூட், கேரட், குங்குமப்பூ சாறு தடவலாம். மினுமினுப்புக்கு வைட்டமின் இ ஆயில், வெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவையும் தடவலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உதட்டின் மீது தடவிவந்தால் உதட்டின் அழகு தனியாக காண்பிக்கும்.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.