முதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா? சூப்பர் டிப்ஸ் இதோ...

பொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால் முதுகு கருப்பாக காணப்படும். இதற்கு காரணம் கை, கால்களின் அழகை பராமரிக்கும் நாம் முதுகை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை.

அந்தவகையில் இதற்கு பல இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
 
• தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து உங்களது முதுகுப்பகுதி முழுவது பூசுங்கள். இதனை அரைமணி நேரம் விட்டுவிட்டு பின்னர் சோப்பு போடாமல் குளித்து விடுங்கள். இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் போக கூடாது.

• தேன், கடலை மாவு, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து முகம் மற்றும் உடலுக்கு பேக் போட்டுக்கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இது உடலில் இருக்கும் கருமையை நீக்கி பொலிவை தரக்கூடியது.

• விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன் ஆகியவை சேர்ந்த கலவையை எடுத்து உடலுக்கு நன்றாக தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதால் மேனி இழந்த பொலிவை திரும்ப பெற்று, கூடுதல் நிறம் பெறும். விட்டமின் இ கேப்சூல் மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

• தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு நன்றாக தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனை அடிக்கடி செய்தால் மிகச்சிறந்த பலன் கிடைப்பது உறுதி.

• ஆரஞ்சு தோலை காய வைத்து பௌடர் ஆக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் பௌடரையும் பயன்படுத்தலாம். இந்த பௌடரை ரோஸ் வாட்டர் உடன் கலந்து அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு வாஷ் செய்தால் கருமை நீங்கும்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

பெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து

புதிய தொகுப்புகள்