நரைமுடியை கருகருவென மாற்ற பீர்க்கங்காயை இப்படி யூஸ் பண்ணுங்க!

இன்றைய சந்ததியினர் பலருக்கு இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.

இதற்கு காரணம் இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் காரணமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி பலரும் நரைமுடி மறைய பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.

மேலும் நரைமுடி மறைய கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது.

இதிலிருந்து எளிதில் விடுபட இயற்கை முறைகள் பல உள்ளன. அதில் தற்போது ஒன்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• உலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப்
• தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை:

பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே காய வைக்க வேண்டும்.

இந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும்.

எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

இறுதியாக நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

பீர்க்கங்காய் இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை எளிதில் போக்குகிறது.

இதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.

You may also like ...

வாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க... 20 நிமிடத்தில் தலைவலி நீங்கிவிடும்!

தலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும்

நான்கே நாளில் பாதவெடிப்பை போக்க கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!

பாதங்களில் பாதவெடிப்பு வருவதற்கான முக்கிய காரணம் ப

புதிய தொகுப்புகள்