குறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால் பியூட்டி பாலர்களுக்கு செல்வது தான் வழக்கம்.

ஏனெனில் வெயிற்காலங்களில் வெளியே செல்வதனால் முகம் பொலிவிழந்து மங்கி காணப்படும்.

அந்தவகையில் விசேஷ நாட்களில் முகம் பொலிவு பெற கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும். முகம் பளிச் சென்று காணப்படும். தற்போது அவற்றை பார்ப்போம்.
 
• க்ரீன் டீ எடுத்து, அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் முகத்தில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவுங்கள். முகத்தில் புது பொலிவு வரும்.

• சிறிது தயிருடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். முகத்தில் சூரிய கதிர்களால் உண்டாகும் கருமை மறைந்து சருமம் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறும்.

• வாழைப்பழத்தை மசித்து அதில் தேன் கலந்து முகத்தில் பேக் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

• அரை துண்டு தக்காளியை மசித்து அதோடு, மஞ்சள் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும், முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாய் இருக்கும். வாரம் இருமுறை செய்தால், சருமம் மிகவும் சுத்தமாகி, முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

• குங்குமப் பூவை பொடி செய்து சிறிது பாலில் குழைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் அட்டகாசமான பொலிவு கிடைக்கும். சருமம் மிக மென்மையான அழகாக மாறும்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

இரவு சரியா தூங்க முடியவில்லையா? சில எளிய இயற்கை வழிகள் இதோ..!

இன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

புதிய தொகுப்புகள்