நகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும் ஆசை உள்ளது.

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உடல் நோய்களுக்கான அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதேவேளை சிலருக்கு நகத்தில் மஞ்சள் கோடுகள் போல் தோற்றமளிக்கும். இதற்கு நகங்களுக்கு பாலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தின் காரணமாகவும், மஞ்சள் கோடுகள் இருக்கலாம் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் நகங்களில் காணப்படும் மஞ்சள் நிறக்கறையை எப்படி போக்குவது என்பதை பார்ப்போம்.

• டூத் பேஸ்டை வைத்து நகங்களை நன்றாக துடைக்க வேண்டும். இது நகத்திலுள்ள கரையை அகற்ற மட்டுமல்லாது அதனை வெண்மையாகவும் பளபளவென்றும் வைக்க உதவும்.

• விரல்களை எலுமிச்சை நீரில் ஊற வைக்க வேண்டும். இது நகத்தில் உள்ள மஞ்சள் கறையை அகற்றும்.

• பேக்கிங் சோடாவையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து, ஒரு பேஸ்டை தயாரியுங்கள். அதனை நகங்களின் நுனிகளிலும், மையப் பகுதிகளிலும் தடவுங்கள். இது மஞ்சள் நிற நகங்களை எந்த ஒரு சிரமமுமின்றி சரிப்படுத்த உதவும்.

• மஞ்சள் நிற நகங்கள் வர மிக முக்கிய காரணங்களில் ஒன்று, நம் உடம்பில் ஜிங்க் சத்தின் பற்றாக்குறை. அதனால் ஜிங்க் சத்துள்ள உணவு பொருட்களான முட்டை, கடல் சிப்பி போன்றவற்றை, தினசரி உணவோடு சேர்த்து கொள்ளுங்கள். இது இந்த மஞ்சள் நக பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

• எலுமிச்சை சேர்க்கப்பட்ட எண்ணெயை நகத்தில் பயன்படுத்தினால் நகத்தை அது வெண்மையாக்கும். அதற்கு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நகங்களை அதில் ஒருசில நிமிடங்கள் ஊற விட வேண்டும். இதுவும் கூட நல்ல பலனை அளிக்கும்.

• வைட்டமின் ஈ என்ற மந்திரத்தால் மஞ்சள் நக பிரச்சனையை குணப்படுத்தலாம். எனவே இந்த நக பிரச்சனைகள் இல்லையென்றாலும், இந்த சத்துள்ள உணவு பொருட்களான நட்ஸ், முட்டை போன்றவற்றை உண்ணுங்கள்.

• கைகளையும் நகங்களையும் நேரம் கிடைக்கும் போது பொலிவூட்டும் கருவியை வைத்து பாலிஷ் செய்தும், மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி, ஈரப்பதத்துடனும் வைக்க வேண்டும். அதுவும் பொலிவூட்டும் கருவியை வைத்து நகங்களை பாலிஷ் செய்து, பின் தண்ணீரில் கழுவுங்கள். காய்ந்த பின் நல்ல தரமான மாய்ஸ்சுரைசர் மற்றும் நெயில் பாலிஷ்களை பயன்படுத்தலாம். இது நகங்களை நல்ல நிலையில் வைத்து மஞ்சள் நிறம் வராமல் பாதுகாக்கும்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

இரவு சரியா தூங்க முடியவில்லையா? சில எளிய இயற்கை வழிகள் இதோ..!

இன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

புதிய தொகுப்புகள்