இளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதோ!

30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் தோற்றமளித்து விடுகின்றது.

இதற்காக நம்மில் பலரும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பது வழக்கமாயிற்று.

இருப்பினும் இது நிரந்த அழகினை தராது. இதற்கு இயற்கையில் கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்தே செலவில்லமால் அழகை பெற முடியும்.

அந்தவகையில் வெண்டைக்காய் சருமத்தை மாசு மருவற்றதாக சுத்தமாக வைத்திருக்க உதவி புரிகின்றது.

வெண்டைக்காயில் ஆன்டி பாக்டீரியல் தன்மை மிக அதிகமாகவே இருக்கிறது.

அதனால் இது முகப்பருக்களை சருமத்தில் உண்டாக்கும் பாக்டீரியாக்களோடு பருக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை சருமத்துக்குத் தேவையான மாய்ச்சரைஸரையும் கொடுக்கும்.

மேலும் அதிலுள்ள ஆன்டி ஆக்சிடணட்டுகள் சருமத்தை தூய்மையாக்கி புத்துணர்ச்சியான இளமை ததும்பும் சருமத்தைக் குறைக்கும். தற்போது வெண்டைக்காயை வைத்து எப்படி இளமையை பெறலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• வெண்டைக்காய் - 5
• தயிர் - 1 ஸ்பூன்

செய்முறை:

நாலைந்து வெண்டைக்காயை எடுத்து நன்கு சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். காயின் காம்பை மட்டும் நீக்கினால் போதும்.

வெட்டி வைத்த வெண்டைக்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் எதுவும் அரைக்கும்போது சேர்க்கத் தேவையில்லை. இந்த அரைத்த கலயை ஒரு சுத்தமான பௌலிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த அரைத்த வெண்டைக்காய் கலவையுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அரைத்து வைத்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் கை, கால்களிலும் அப்ளை செய்யலாம். அரை மணி நேரம் அப்படியே உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? டிப்ஸ் இதோ...

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் அதிகமாக புகையிலை புக

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம

புதிய தொகுப்புகள்