×

Error

There was a problem loading image vwcTte1uLUXuBIAAAAASUVORK5CYII=.

முழங்கால்கள் கருப்பாக காணப்படுகின்றதா? சூப்பர் டிப்ஸ் இதோ...

பொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று முழங்கால் கருமை. ஏனெனில் அவர்கள் குட்டையான ஆடையை அணியும் போது முழங்கால் மட்டும் கருமையாக இருந்தால் அசிங்கமாக இருக்கும்.

இதற்காக அடிக்கடி பியூட்டி பாலர்களை நாடிச் செல்வது வழக்கம். இதனால் பணம் தான் விரயமாகுமே தவிர முழங்கால் கருமையே நிரந்தரமாக போக்க முடியாது. இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இந்த கருமையை போக்க முடியும்.

பெண்களே உங்கள் முழங்காலில் உள்ள கருமையைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்றையாவது ட்ரை பண்ணி பாருங்க.
 
• 1 வெங்காயம் மற்றும் 1 பூண்டு எடுத்துக் கொண்டு, அரைத்து அதனை முழங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். பிறகு கிளிசரினை எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முழங்காலில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

• 8-10 பாதாமை அரைத்து பொடி செய்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்காலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அவ்விடத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

• ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு தினமும் இரவில் மசாஜ் செய்து வர வேண்டும். இதனாலும் முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.

• 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியில் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, வேண்டுமானால் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி 2 நிமிடம் ஊற வைத்து, பின் முழங்காலை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, பின் கழுவ வேண்டும்.

• எலுமிச்சை மற்றும் தேனை ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.

You may also like ...

குறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்

உங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

பொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா

புதிய தொகுப்புகள்