15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

பூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில் இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றதாக விளங்குகின்றது.

ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் பூசணிக்காயை உபயோகப்படுத்தலாம்.

உங்களுக்கு வறண்ட அல்லது எண்ணெய் சருமம் அல்லது சென்ஸிடிவ் சருமமாக இருந்தாலும், இந்த பூசணிக்காய் ஃபேஸியல் பேக் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

தற்போது இந்த பேக்கை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

தேவையானவை:
• பூசணியின் சதைப்பகுதி - அரைக் கப்
• தேன் - அரை ஸ்பூன்
• பால் - கால் டீஸ்பூன்
• பட்டைப் பொடி - சிறிதளவு

செய்முறை:
முதலில் பூசணியின் சதைப்பகுதியை மசித்து, அதனுடம் மற்ற பொருட்களை சேர்த்து, முகத்தில் தேயுங்கள்.

பின்னர். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், சருமம் பளபளப்பாக இருக்கும். சுருக்கங்கள் போய்விடும்.

இந்த பேக்கை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பூசி வந்தால் நாளடைவில் நல்ல பயனை பெறலாம்.

You may also like ...

மூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ!

பொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற

IPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு

புதிய தொகுப்புகள்