கருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ!

பொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள் கருப்பாக காணப்படுவதுண்டு.

கைகள் கருத்து போவதற்கான காரணம் முக்கிய காரணம் அதிகப் படியான சூரிய வெளிச்சம், ஹார்மோன் மாற்றங்கள், உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிப்பது, இறந்த இரத்த செல்கள் அதிகமாக உடலில் சேர்வது தான்.

இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு சென்று தான் வெள்ளையாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்காக கருப்பான விரல்களை சரி செய்வதற்கான எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

டிப்ஸ் 1:
 
சிறிது சர்க்கரையுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கலந்து அதனை விரல்களின் மேல் தேய்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து அதனை வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடுங்கள். அல்லது பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து அதன் மீது சர்க்கரையைத் தூவி அப்படியே கைகளின் மீதும் தேய்க்கலாம். இது சிறந்த பலன் அளிக்கும்.

டிப்ஸ் 2:
 
3 ஸ்பூன் கடவை மாவு, 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 1 ஸ்பூன் பால், அவை அனைத்தையும் ஒரு சேரக் கலந்து விரல்களின் மீது மசாஜ் செய்ய வேண்டும்.

சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் கருத்த நிறம் விரைவில் சரியாகும்.

டிப்ஸ் 3:
 
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1, தேன் - 2 ஸ்பூன், பால் - 2 ஸ்பூன் ,எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1 ஸ்பூன். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அதனை விரல்களின் மீது தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை இதை செய்து வந்தால் சீக்கிரமே நல்ல முன்னேற்றம் தெரியும்.

டிப்ஸ் 4:
 
சிறிது பாதாமை பாலில் போட்டு 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பாதாமை ஒரு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் ஃப்ரஸ் மில்க் கிரீம் - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒரு சேரக் கலந்து விரல்களில் மேல் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.

சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும்.

டிப்ஸ் 5:
 
நெல்லிக்காய்களை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்து பின்னர் அந்த நீரினை குளிரச் செய்ய வேண்டும்.

நெல்லிக்காய் வேக வைத்த நீரை சிறுது பஞ்சில் தொட்டு விலர்களின் மேல் மசாஜ் செய்ய வேண்டும்.

30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். இதை நாள் ஒன்றுக்கு 2 முறை செய்ய வேண்டும்.

டிப்ஸ் 6:
 
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு கின்னத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் முட்டை வெள்ளைக் கரு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை கைகளின் மீது போட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டிப்ஸ் 7:
 
2 முதல் 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கலவையை கைகளின் மீது தடவி நன்குத் தேய்த்து மசாஜ் வேண்டும். பின்னர், குளிரந்த நீரினால் கழுவிடலாம்.

நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். இதனால் கைகளின் கருப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும்.

டிப்ஸ் 8:
 
ஆரஞ்சு பழத்தை உரித்து சூரிய வெளிச்சத்தில் சில நாட்கள் உலர வைக்க வேண்டும்.

உலர்ந்த பழத்தை நன்கு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

3 ஸ்பூன் ஆரஞ்சு பொடியுடன் சிறிது பால், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை கருத்தத் தோலின் மீது போட வேண்டும். இதனால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

டிப்ஸ் 9:
 
5 முதல் 6 ஸ்பூன் துருவிய முள்ளங்கியை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை கைகளின் மீது மசாஜ் செய்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

பின்னர், மிதமான சூடு உள்ள நீரினால் கழுவ வேண்டும். கருத்த கைகளை சரி செய்ய இது ஒரு சிறந்த முறையாகும்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

பெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து

புதிய தொகுப்புகள்