குழந்தை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் அவனது மனசிற்கு ஆறுதல் கிடைக்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதியில் இருந்த பிள்ளைகளைப் பார்க்க உறவினர்கள் பெற்றோர்கள் என பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தார்கள். அவர்களைக் காணுகையில் அந்த பிஞ்சு மனம் எதை எதிர்பாக்கும். எத்தனை தடவை என்னை கேட்டிருக்கிறான். "செல்வி 'ஆன்ரி' எப்ப வருவா மேடம்" என்று. அநாதையான தனக்கு ஆறுதலே செல்வி தான் என்று அந்த பிஞ்சு எண்ணியிருக்க வேண்டும். ஒரு தாய் ஆன்ரியாக வேடம் போட்டபடி 5 வருடங்கள் ஓடிப்போய் விட்டன.

"என்ர அப்பு ராசா. நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது மோனை, நல்லாய் இருப்பாய்." கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கிய படி அந்த ஆச்சி தன்னை அறியாமலே எங்களைப் பாராட்டுறார்.

Page 2 of 2

புதிய தொகுப்புகள்