×

Error

There was a problem loading image 71451.png

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!

ஆட்டு மந்தையோடு ஒரு நாள் ஆட்டுக்குட்டி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. வயல் விளிம்பில் சில புல் இருப்பதைக் கண்டு மற்ற ஆடுகளிடமிருந்து அந்த ஆட்டுக்குட்டி விலகி சென்றது.

ஓநாய் ஒன்று தன்னை நெருங்கி வருவதை கவனிக்காமல் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியின் மீது பாய்வதற்கு முன்பே, 'தயவு செய்து, என்னை சாப்பிட வேண்டாம். என் வயிறு நிறைய புல் நிறைந்திருக்கிறது. சிறிது நேரம் நீங்கள் காத்திருந்தால், என் வயிற்றில் இருக்கும் புல் நன்றாக செரித்து விடும், பிறகு நீங்கள் என்னை ருசிக்கலாம்" என்றது ஆட்டுக் குட்டி.

ஓநாய் இது ஒரு நல்ல யோசனையாக இருக்கிறது என்று நினைத்தது, ஆட்டுக்குட்டி கூறியது போலவே கீழே உட்கார்ந்து காத்திருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, ஆட்டுக்குட்டி, 'நீ என்னை நடனமாட அனுமதித்தால், என் வயிற்றில் உள்ள புல் இன்னும் வேகமாக செரித்துவிடும்" என்றது. ஓநாய் அதற்கும் ஒப்புக்கொண்டது.

ஆட்டுக்குட்டி நடனமாடிக் கொண்டிருக்கும் போது, அதற்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. ஆட்டுக்குட்டி 'தயவு செய்து என் கழுத்தில் கட்டியிருக்கும் மணியை கழற்றி வேகமாக ஓசை எழுப்பினால் நான் இன்னும் வேகமாக நடனமாடுவேன்" என்று ஓநாயிடம் கூறியது. ஓநாய் மணியை கழற்றி தன்னால் முடிந்த வரை ஓசையை எழுப்பியது.

ஆடு மேய்ப்பவர் மணி ஓசையைக் கேட்டதும் காணாமல் போன ஆட்டுக் குட்டியைக் கண்டுபிடிக்க தன்னுடைய நாய்களை அனுப்பினான். நாய்கள் குரைத்துக் கொண்டு வந்ததைப் பார்த்த ஓநாய் பயந்து ஓடிவிட்டது. பின்னர் நாய்கள் ஆட்டுக்குட்டியின் உயிரைக் காப்பாற்றின.

புதிய தொகுப்புகள்