விவசாயியும் மனைவியும்..!

விவசாயி ஒருவர் தன் மனைவியிடம், 'நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய், ஈடுபாடின்றி வேலை செய்கிறாய், உன்னுடைய நேரத்தை வீணடிக்கிறாய்" என்றான். மனைவி தன் கணவனின் வார்த்தைகளை கேட்டு மிகவும் கோபமடைந்தாள்.

மனைவி கணவனிடம், நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. சரி நாளை நீங்கள் வீட்டில் இருந்துக் கொள்ளுங்கள். நான் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள வேலையை செய்கிறேன். நீங்கள் வீட்டில் என்னுடைய வேலையை செய்வீர்களா? என்று கேட்டாள்.

கணவனும் மகிழ்ச்சியாக “மிக்க நன்று, நான் உன்னுடைய வீட்டு வேலையை செய்கிறேன் என்றான்."

அதற்கு மனைவி பால் கறந்திடுங்கள், பன்றிகளுக்கு உணவளித்து விடுங்கள், பாத்திரங்களை கழுவி விடுங்கள், கோழிகளை கவனித்துக் கொள்ளுங்கள், பிறகு நூலிழையை சுழற்றி வையுங்கள் என்று கூறிவிட்டு அடுத்த நாள் தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்.

விவசாயி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பால் கறக்க சென்றான், பால் கறக்க முயலும் போது மாடு எட்டி உதைத்தது. அதற்கு பிறகு, பன்றி கூண்டுக்கு சென்றான். அங்கு உத்திரத்தில் தன் தலையை இடித்துக் கொண்டான். பிறகு கோழிகளுக்கு உணவளித்தான், ஆனால் நூலிழையை சுழற்ற மறந்துவிட்டான்.

மாலையில் மனைவி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தாள். கணவனால் எதுவும் பேசமுடியவில்லை. அதற்கு பிறகு கணவன் மனைவியிடம் எந்த குறையையும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சந்தோஷமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

நீதி: மற்றவர்களிடம் குறை காணாதீர்கள்.

புதிய தொகுப்புகள்