குரங்கும் திமிங்கிலமும்

நீண்ட நாட்களுக்கு முன்பு, சில மாலுமிகள் தங்கள் கப்பலில் கடற் பயணம் மேற்கொண்டனர். அவர்களுள் ஒருவர் தன்னுடைய செல்ல பிராணியான குரங்கை அவர்களுடன் கூட்டி சென்றார்.

அவர்கள் கடலில் வெகு தொலைவிற்கு சென்ற போது, ஒரு பயங்கரமான புயல் அவர்கள் சென்ற கப்பலை புரட்டி போட்டது. கப்பலில் பயணம் செய்த எல்லோரும் கடலில் விழுந்தனர், குரங்கும் தான் நிச்சயம் கடலில் மூழ்கி விடுவோம் என்று உறுதியாக இருந்தது. திடீரென அங்கு ஒரு திமிங்கலம் வந்து குரங்கை அழைத்துக் கொண்டு சென்றது.

விரைவில் அவர்கள் இருவரும் ஒரு தீவை அடைந்தனர், குரங்கு திமிங்கலத்தின் முதுகிலிருந்து கீழே இறங்கியது. திமிங்கலம் குரங்கிடம் “இந்த இடம் உனக்குத் தெரியுமா?" என்று கேட்டது, அதற்கு குரங்கு, “ஆம், எனக்கு தெரியும். உண்மையில் இந்த தீவின் ராஜா என்னுடைய நண்பர். நான் உண்மையில் ஒரு இளவரசன் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்க, அந்த தீவில் யாரும் வசிப்பதில்லை என்று அறிந்திருந்த திமிங்கலம், “சரி, சரி, நீ இந்த பகுதியின் இளவரசன் தான்! இனிமேல் நீ இந்த பகுதியின் ராஜாவாக இருக்கலாம்! " என்று கூறியது.

குரங்கு, “நான் எப்படி ஒரு ராஜாவாக இருக்க முடியும்?" என்று திமிங்கலத்திடம் கேட்க, திமிங்கலம் நீந்திக் கொண்டே, “இது எளிதானது. இந்த தீவில் இருக்கும் உயிரினம் நீ மட்டுமே, அதனால் நீ ராஜா தான் ! " என்று கூறிவிட்டு சென்றது.

நீதி : பொய் சொல்கிறவர்கள் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்வார்கள்.

புதிய தொகுப்புகள்