உலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா சார்பில் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று உலகம் முழுக்க “நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தொழில்நுட்பத்தின் உறுதிப்பாடு;” எனும் கருப்பொருளில் இத் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சனத்தொகையில் 20 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்துவருகின்றனர், இவர்களில் அதிகமானவர்கள் ஊனமுற்ற நபர்களாகக் காணப்படுகின்றனர்.