தீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்தின் சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் கொண்டாடப்படுகின்றது.
1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உயிர் பல்வகைமை தினம் பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீவுகளில் ஒன்றான இலங்கை உயிர் பல்வகைமையுடன் கூடியதொரு சூழல் கட்டமைப்பு என சுற்றாடல் அமைச்சின் உயிர் பல்வகைமை தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவிக்கின்றார்.
மனித வாழ்க்கையுடன் உயிர் பல்வகைமை ஒன்றிணைந்து காணப்படுவதாகவும், இதனால் உயிர் பல்வகைமை பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
மனித செயற்பாடுகளினால் உயிர் பல்வகைமைக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
அத்துடன் காலநிலை மாற்றங்களினாலும், உயிர் பல்வகைமை பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
உயிர் பல்வகைமை பாதுகாப்பதற்கு மக்கள் பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சின் உயிர் பல்வகைமை தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் குறிப்பிடுகின்றார்.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருக்கும் இடங்களிலேயே அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், இதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தாமாகவே உணர்ந்து செய்ய வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.