ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினம் ஆக (International Day of Human Space, April 12) உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.
மனித விண்வெளிப் பயணத்துக்கான உலக தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதி கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. ரஷியாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.
ஏப்ரல் 12 ஆம் தேதியை மனித விண்வெளி பயணத்துக்கான சர்வதேச நாளாகப் பிரகடனம் செய்யப்படுவதற்கு மூலமாக அமைந்த காரணம் விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளிப் பயணம் நிகழ்ந்து 50வது ஆண்டுகள் பூர்த்தியடைந்ததுதான்.
ரஷியாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12 வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷியாவில் ஏப்ரல் 12 தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுக்க பரவியிருக்கிறது.
![]() |
On 16 June 2013 the world will celebrate the 50th anniversary of the first woman's flight to space. Shown: Ms. Valentina Tereshkova, the first woman in space. |
யூரி அலெக்சியேவிச் ககாரின் ரஷியாவில் மொஸ்கோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் 1934, மார்ச் 9 இல் பிறந்தார். இவர் பிறந்த இப்பிரதேசம் பிற்காலத்தில் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. (இவர் 1968ம் ஆண்டில் காலமானார்).
இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணையில் வேலை பார்த்தார்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதி நேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பள்ளிக் கூடத்தில் (Flight Orenburg Pilot's School)இல் இணைந்து மிக்- 15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். 1957 ம் ஆண்டில் வலென்டினா கொரசோவா என்பவரை திருமணம் செய்தார். நோர்வே எல்லையில் மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் பணியை ஆரம்பித்தார்.
1960 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை தொடங்கியது. இதில், 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார். இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன.
கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வானார்கள். ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்ப தேர்வு செய்யப்பட்டார்.
யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக் விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்தது.
விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும்.
1968 மாதம் 27 தேதிககாரின் ஓட்டி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
சாதனை படைத்த ககாரின் தனது 34 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
யூரி ககாரின் மிகக் குறுகிய காலம் இவ்வுலகில் வாழ்ந்த போதிலும் அவர் பெயர் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது.